உயிரைப் பறித்த மோதல்கள்; அடங்க மறுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

மியன்­மா­ரில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மீது ராணு­வப் படை­யி­ன­ர் குண்டு பாய்ச்­சிய சம்பவம் தொடர்பில் சிங்­கப்­பூர், அமெ­ரிக்கா, பிரான்ஸ், பிரிட்­டன் ஆகிய நாடு­களு­டன், ஐக்­கிய நாட்டு தலை­மைச் செய­லா­ளர் எண்டோனியோ குட்­டேர்­ரஸ் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார். ராணு­வத்­தின் ஆட்­சிக் கவிழ்ப்பை எதிர்த்து நேற்று முன்­தி­னம் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தில் போலி­சார் உண்­மை­யான தோட்­டாக்­க­ளைக் கொண்டு சுட்­ட­தில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களில் இரு­வர் உயி­ரி­ழந்­த­னர். இருப்­பி­னும், நேற்று ஆயி­ரக்­க­ணக்­கில் எதிர்ப்­பா­ளர்­கள் வடக்கே, தெற்கே என பல நக­ரங்­களில் ஆர்ப்­பாட்­டத்­தைத் தொடர்ந்­த­னர்.

அத்­து­டன் இன்று மிகப் பிரம்­மாண்ட அள­வில் பேரணி ஒன்றை நடத்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ஆட்­சிக் கவிழ்ப்­புக்கு ஆத­ர­வ­ளித்த பிர­பல நடி­கர் லூ மின்னை நேற்று போலி­சார் கைது செய்­த­தாக கைதான­வ­ரின் மனைவி தெரி­வித்­தார்.

மேலும், ‘ட்ரூ நியூஸ்’ எனும் ராணு­வத்­தின் பிர­தான ஃபேஸ்புக் பக்­கம், வன்­முறை­யைத் தூண்­டும் வகை­யில் உள்­ள­தா­கக் கூறி ஃபேஸ்புக் அதை நீக்­கி­யது.

இன்று ஒரு­மைப்­பாட்­டைக் காண்­பிக்க, கடை­களும் வர்த்­த­கங்­களும் தங்­க­ளின் கத­வு­களை மூடும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. மியன்­மா­ரின் ஆகப் பெரிய வர்த்­தக நிறு­வ­ன­மான ‘சிட்டி மார்ட்’, அதன் அனைத்து கிளை­க­ளை­யும் மூட­வுள்­ள­தா­க­வும் அறி­வித்­துள்­ளது.

அமை­தி­யான முறை­யி­லேயே நடந்து வரும் ஆர்ப்­பாட்­டங்­களை வன்­முறை கொண்டு அடக்க முயல்­வது, ஏற்­கெ­னவே பரி­த­விப்­பில் உள்ள மியன்­மார் பொரு­ளியலை மேலும் நெருக்­கு­வ­தாக உள்­ளது. தனி­யார் வங்­கிக் கிளை­களில் பெரும்­பாலா­னவை மூடப்பட்டுவிட்டன. தானி­யங்கி இயந்­தி­ரங்­க­ளி­லும் பணம் குறைந்­து­கொண்டே வரு­கிறது. இன்று நாடெங்­கும் மக்­கள் திர­ளாக வரு­வ­தைக் காண முடி­யும் என்று தாம் எதிர்­பார்ப்­ப­தா­கக் கூறிய ஜன­நா­யக தேசிய லீக் கட்­சி­யின் திரு ஆங் கியாவ் கியாவ் ஊ, “வன்­மு­றை­யைக் கையா­ளும் ராணு­வத்­திற்கு எதி­ராக நாம் தொடர்ந்து போராட வேண்­டும்,” என்­றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!