6 கால்கள், 2 வால்களுடன் 'அதிசய' நாய்க்குட்டி

ஆறு கால்கள், இரண்டு வால்களுடன் நாய்க்குட்டி ஒன்று பிறந்திருக்கிறது.

‘ஸ்கிப்பர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த நாய்க்குட்டியை ‘அதிசயம்’ என்கின்றது ஒக்லஹோமா நகரத்தில் உள்ள நீல் கால்நடை மருத்துவமனை. அந்த நாய்க்குட்டி பிறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, கடந்த மாதம் 21ஆம் தேதி இந்தக் குட்டியைப் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிட்டது மருத்துவமனை.

அந்தக் குட்டி பிறந்த 10வது நாளில் அந்த வயதுக்குரிய நாய்க்குட்டிகளின் செயல்பாட்டைப்போல செயல்பட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தன்னுடைய எட்டு சகோதர சகோதரிகளைப் போலல்லாது, ஸ்கிப்பருக்கு இரண்டு இடுப்பு பகுதிகளும் இரண்டு சிறுநீர்ப் பாதைகளும் இரண்டு இனப்பெருக்க அமைப்புகளும் இருப்பதாகத் தெரிவித்த மருத்துவர்கள், அந்த பெண் நாய்க்குட்டி இரட்டையர்களாக உருவாகி இருக்கலாம் எனவும் கருவில் வளர்ந்தபோது அவை இரண்டாகப் பிரியாமல் இருந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டனர்.

அதன் கால்களை வலுப்படுத்த சில பயிற்சிகள் ஸ்கிப்பருக்கு வழங்க வேண்டியிருக்கலாம் என்று குறிப்பிட்ட மருத்துவர்கள், அது வளரும்போது சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அது எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும் என்பது தெரியவில்லை என்றனர்.

தற்போதைக்கு நலமுடன் இருக்கும் ஸ்கிப்பருக்கு வேண்டிய பராமரிப்பு வழங்கப்படும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!