விமானியில்லா போர் விமானம் முதல் சோதனையில் வெற்றி

போயிங் நிறு­வ­ன­மும் ஆஸ்­தி­ரே­லிய ஆகா­யப் படை­யும் விமா­னி­யில்லா ஜெட் போர் விமா­னத்­தின் முதல் சோத­னையை வெற்­றி­ க­ர­மாக முடித்­துள்­ளன.

ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ஐம்­பது ஆண்­டு­கால வர­லாற்­றில் முதல் முறை­யாக ‘லாயல் விங்­மேன்’ எனும் ராணு­வ விமா­னம் உள்­ளூ­ரி­லேயே வடி­வ­மைக்­கப்­பட்டு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

தெற்கு ஆஸ்­தி­ரே­லி­யா­வில் உள்ள கட்­டுப்­பாட்டு நிலை­யத்­தில் போயிங் நிறு­வ­னத்­தின் மேற்­பார்­வை­யில் விமா­னம் சோதிக்­கப்­பட்­டது.

இந்த விமா­னத்­தைத் தயா­ரிக்க ஆஸ்­தி­ரே­லியா அர­சாங்­கம் 40 மில்­லி­யன் ஆஸ்­தி­ரே­லிய டாலரை முத­லீடு செய்­துள்­ளது.

அமெ­ரிக்கா, பிரிட்­டன் போன்ற நாடு­கள் இந்த விமா­னத்­தின் மீது ஆர்­வம் காட்டி வரு­கின்­றன.

‘லாயல் விங்­மேன்’ 11.6 மீட்­டர் நீள­முள்­ளது.

இதன் மூக்­குப் பகுதியை மாற்றி வெவ்­வேறு பணி­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­த­லாம்.

விலை­ உயர்ந்த போர் விமா­னங்­க­ளுக்கு பாது­காப்புக் கேட­ய­மா­க­வும் இவற்றைப் பயன்படுத்தலாம். இந்த நிலையில், மேலும் மூன்று விமானங்களை வாங்க கூடுதலாக 115 டாலரை முதலீடு செய்ய ஆஸ்திரே லிய அரசு திட்டமிட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!