மரண எண்ணிக்கை 700ஐ தாண்டியது; நீடிக்கும் பதற்றம்

யங்­கூன்: மியன்­மா­ரில் நடந்த ராணுவ ஆட்­சிக் கவிழ்ப்பை எதிர்த்து நாடெங்­கும் தொடர்ந்து பல ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­ப­டு­கின்­றன.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கலைக்க பாது­காப்­புப் படை­யி­னர் மூர்க்­கத்­த­ன­மான அணு­கு­மு­றை­

க­ளைக் கையாள்­வ­தால் பல

உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

இது­வரை மர­ண­ம­டைந்­தோர் எண்­ணிக்கை 700ஐ தாண்­டி

உள்­ளது.

பொது­மக்­கள் மீது மியன்­மார் ராணு­வத்­தால் கட்­ட­விழ்க்­கப்­படும் வன்­மு­றையை உலக நாடு­கள் மிகக் கடு­மை­யா­கச் சாடு­கின்­றன.

இருப்­பி­னும், இப்­பி­ரச்­சி­னைக்கு இன்­னும் தீர்வு காணப்­ப­ட­வில்லை.

நேற்று காலை மாண்­ட­லே­யில் ராணு­வத்­துக்­குச் சொந்­த­மான

வங்­கிக்கு வெளியே வெடி­குண்டு வெடித்­த­தில் பாது­காப்பு அதி­காரி ஒரு­வர் மாண்­டார்.

மியன்மார் ராணுவத்துடன் ஒத்துழைக்க வேண்டாம் என்ற அழைப்புக்கு இணங்க, அந்த வங்கியில் பணம் போட்டவர்கள், போட்ட பணத்தை வெளியெடுத்து வருகின்றனர்.

இதனால் ராணுவத்துக்குச் சொந்தமான வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்­தி­னம் பாது­காப்­புப் படை­யி­னர் நடத்­திய துப்­பாக்­கிச் சூட்­டில் 82 ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் மாண்­ட­தாக கண்­கா­ணிப்­புக் குழு ஒன்று தெரி­வித்­தது.

பாகோ நக­ரில் காய­ம­டைந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு மருத்­துவ உதவி மறுக்­கப்­பட்­ட­தாக மியன்­மா­ரில் உள்ள ஐநா

அலு­வ­ல­கம் டுவிட்­ட­ரில் பதி­விட்­டது. இதற்­கி­டையே, மியன்­மார் ராணு­வம் இணை­யச் சேவையை முடக்­கி­யுள்­ளது. இருப்­பி­னும், மியன்­மார் இளை­யர்­கள் துவண்­டு ­வி­டா­மல் ராணு­வத்­தின் மூர்க்­கத்­த­ன­மான அடக்­கு­முறையை வெளிச்­சத்­துக்கு கொண்டு வரும் நோக்கில் துண்டுப் பிர­சு­ரங்­களை விநி­யோ­கித்து வரு­கின்­ற­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!