முதல்-வ-ரைப் பிடித்து வைத்த மாண-வர்-கள்; போலி-சார் தடி-யடி

முதல்-வ-ரைப் பிடித்து வைத்த மாண-வர்-கள்; போலி-சார் தடி-யடி

1 mins read
d5f53c80-dc6f-4132-9af5-93f2b87ef81e
-

ஜியாங்சு: சீனா­வில் நடந்த ஆர்ப்­பாட்­டத்­தின்­போது கல்­லூரி முதல்­வரை மாண­வர்­கள் பிணை­யாக பிடித்து வைத்­தி­ருந்­த­னர்.

ஜியாங்சு மாநி­லத்­தில் உள்ள நாஞ்­சிங் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஜாங்­பாய் கல்­லூ­ரி­யில் ஞாயிற்­றுக்­கி­ழமை முதல் ஒன்­று­கூ­டிய இளங்­கலை பட்­ட­தா­ரி­கள், 55 வய­தான கல்­லூரி முதல்­வரை 30 மணி நேரத்­திற்­கும் மேலாக வளா­கத்­தில்

தடுத்­து­வைத்­த­தாக டான்­யாங் நகர போலி­சார் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­த­னர்.

நாஞ்­சிங் கல்­லூ­ரியை தொழிற்­கல்வி கழ­கம் ஒன்­று­டன் இணைக்­கும் திட்­டத்­திற்கு எதிர்ப்பு தெரி­வித்த மாண­வர்­கள், தாங்­கள்

படித்­து­பெற்ற பட்­டத்­திற்கு மதிப்­பில்­லா­மல் போய்­வி­டுமோ என்ற அச்­சத்­தில் மாண­வர்­கள் இவ்­வாறு செய்­த­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.

கல்­லூ­ரியை இணைக்­கும் திட்­டங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக நிறுத்து

வதாக அதி­கா­ரி­கள் அறி­வித்த பிற­கும் மாண­வர்­கள் முதல்­வரை வெளி­யே­ற­வி­ட­வில்லை என்­றும் அந்த அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, முதல்­வரை விடு­விப்­ப­தற்­காக அங்கு சென்ற போலி­சார் தடி­யடி நடத்­தி­ய­தால் சில மாண­வர்­கள் காய­ம­டைந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.