ஹாங்காங் திரும்பிய இளையர் தடுத்துவைப்பு

ஹாங்­காங்: சீனா­வில் சிறை­யில் அடைக்­கப்­பட்டு பின்­னர் விடு­விக்­கப்­பட்ட இளை­யர் ஒரு­வர், ஹாங்­காங் திரும்­பி­ய­தும் தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டார்.

தீ மூட்ட முயற்சி செய்­த­தா­க­வும் அபா­ய­க­ர­மான ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­த­தா­க­வும் அந்த இளை­யர் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் படகு மூலம் தைவான் தப்­பிச் செல்ல முயற்சி செய்த 12 பேரை சீன அதி­கா­ரி­கள் நடுக்­க­ட­லில் மடக்­கிப் பிடித்­த­னர்.

அவர்­களில் 17 வயது ஹோயங் லாம் புக்­கும் ஒரு­வர். அதன் பின்­னர் அவர் எங்கு உள்­ளார் என்பது யாருக்கும் தெரி­ய­வில்லை. சீனா அல்­லது ஹாங்­காங்­கில் உள்ள சிறை­யில் அவர் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று நம்பப் பட்டது. இந்த நிலை­யில் சீனா­வில் சிறை­யி­லி­ருந்து அவர் விடு­விக்­கப்­பட்­டுள்ளார். ஆனால் ஹாங்­காங் திரும்­பி­ய­தும் அவர் உடனே பயிற்சி நிலை­யத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டார்.

ஹாங்­காங்­கில் 14 முதல் 20 வய­துக்­குட்­பட்ட இளை­யர்­கள் சிறைக்­குப் பதி­லாக பயிற்சி நிலை­யத்­துக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­ற­னர். அங்கு இளம் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மறு­வாழ்வு அளிக்­கப்­பட்டு வர்த்­த­கம் போன்ற துறை­களில் பயிற்சி அளிக்­கப்­ப­டு­கிறது.

ஆறு மாதம் முதல் மூன்று ஆண்­டு­கள் வரை இளை­யர்­கள் அங்கு தடுத்து வைக்­கப்­ப­டலாம்.

இளை­யர்­க­ளின் நடத்­தை­யைப் பொறுத்து அவர்­களை விடுவிப்பது குறித்து அதி­கா­ரி­கள் முடிவு செய் கின்றனர்.

தீ மூட்­டும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­தை­யும் ஆயு­தம் வைத்­தி­ருந்­த­தை­யும் ஹோயங் ஒப்­புக்கொண்­டுள்­ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஹாங்­காங்­கில் நடந்த ஜன­நா­ய­க ஆத­ரவு ஆர்ப்­பாட்­டங்­க­ளின்­போது ஹோயங் குற்­றச்­செ­யல்­களைப் புரிந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

மாவட்ட நீதி­பதி ஃபிராங்கி இயூ, சட்­டத்தை மதிக்­கா­மல் பொறுப்­பற்ற முறை­யில் ஹோயங் நடந்­து­கொண்­டதாகக் கூறி­னார்.

ஆனால் குற்­றங்­களை ஒப்­புக்­கொண்ட அவ­ரது நேர்­மையை நீதி­பதி கவ­னத்­தில் எடுத்­துக்கொண்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!