எல்லைகளைத் திறக்க ஆஸ்திரேலியா திட்டம்

கேன்­பரா: கிறிஸ்­மஸ் தினத்­துக்­குள் தனது அனைத்­து­லக

எல்­லை­க­ளைத் திறக்க ஆஸ்­தி­ரே­லியா திட்­ட­மிட்­டுள்­ளது.

கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக கிரு­மிப் பர­வல் மோசம் அடை­வ­தைத் தடுக்க ஆஸ்­தி­ரே­லியா அதன் எல்­லை­களை மூடி­யது.

இந்­நி­லை­யில், கூடிய விரை­வில் எல்­லை­க­ளைத் திறக்க ஆஸ்­தி­ரே­லியா இலக்கு கொண்­டுள்­ளது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் விகி­தம் 80 விழுக்­காட்டை எட்­டி­ய­தும் அந்­தந்த மாநி­லங்­களில் இருக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் மீண்­டும் வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­லாம். குறிப்­பிட்ட நாடு

­க­ளுக்­குத்­தான் செல்ல வேண்­டும் என்ற கட்­டுப்­பாடு இருக்­காது என்று ஆஸ்­தி­ரே­லிய சுற்­றுப்­ப­ய­ணத்­துறை அமைச்­சர் டேன் டெஹன் தெரி­வித்­தார்.

கடந்த மார்ச் மாதத்­தி­லி­ருந்து ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குள் செல்ல பெரும்­பா­லான வெளி­நாட்­ட­வர்­

க­ளுக்­கு விதிக்கப்பட்ட தடை தற்போது நடப்பில் உள்ளது.

எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டால் ஆஸ்­தி­ரே­லி­யர்­கள் அவர்­கள் விருப்­பப்­படி எந்த நாட்­டுக்­கும் செல்­ல­லாம் என்று அமைச்­சர் டெஹன் தெரி­வித்­த­

போ­தி­லும், அந்­தந்த நாடு­க­ளின் விதி­மு­றைக்கு உட்­பட்டு அவர்­கள் நடந்­து­கொள்ள வேண்­டும் என்று அவர் கூறினார்.

வெளி­நா­டு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ளும் ஆஸ்­தி­ரே­லி­யர்­

க­ளின் தனி­மைப்­ப­டுத்­தும் நாட்­

க­ளைக் குறைக்க சிறப்பு இரு­வ­ழிப் பயண ஏற்­பாடு தொடர்­பாக சில நாடு­க­ளு­டன் ஆராய்ந்து வரு­வ­தாக ஆஸ்­தி­ரே­லிய அர­சாங்­கம் கூறி­யது.

இதற்­கி­டையே, கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுக்­குள் கொண்டு­வர ஆஸ்­தி­ரே­லி­யா­வின் விக்­டோ­ரியா மாநி­லத்­தில் நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை எதிர்த்து மெல்­பர்­னில் கடந்த சில நாட்­

க­ளாக ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கலைக்க மெல்­பர்­னில் நேற்று கூடு­தல் போலிஸ் அதி­கா­ரி­கள் தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்­ட­னர். வன்­மு­றை­மிக்க ஆர்ப்­பாட்­டங்­கள் தடுக்­கப்­படும் என்று அந்­ந­கர போலிஸ் படை­யின் தலைமை ஆணை­யர் ஷேன் பேட்­டன் சூளு­ரைத்­தார்.

மூர்க்­கத்­த­ன­மாக நடந்­து­கொள்­ளும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அவர் கூறி­ய­போ­தும் எத்­த­கைய உத்­தி­கள் கையா­ளப்­படும் என்­பது குறித்து அவர் தெரி­விக்­க­வில்லை.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் சிலர் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக மெல்­பர்ன் போலி­சார் தெரி­வித்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!