முடிவுக்கு வரும்போல் இருக்கும் சீன-கனடிய அரசதந்திர பூசல்

பெய்ஜிங்: சீனா­வின் ஹுவா­வெய் தொழில்­நுட்ப நிறு­வ­னத்­தின் தொடர்­பில் அந்­நாட்­டிற்­கும் கன­டா­விற்­கும் இடையே ஏற்­பட்ட அர­ச­தந்­திர பூசல் ஒரு முடி­வுக்கு வரு­வது போல் தெரி­கிறது. கன­டா­வில் கைதான ஹுவா­வெய் நிறு­வ­ன­ரின் மகளும் அந்­நி­று­வ­னத்­தின் நிர்­வா­கி­யு­மான திரு­வாட்டி மெங் வாங்சூ விடு­விக்­கப்­பட்­ட­தைத்­ தொ­டர்ந்து சீனா­வில் பிடித்­து­வைக்­கப்­பட்ட இரண்டு கன­டி­யர்­களும் விடு­விக்­கப்­பட்­டனர்.

திரு­வாட்டி மெங் விடு­விக்­கப்­பட்ட சில மணி­நே­ரத்­திற்­குப் பிறகு கன­டா­வின் மைக்­கல் ஸ்பெ­வர், மைக்­கல் கொவ்­ரிக் ஆகி­யோர் விடு­விக்­கப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. திரு­வாட்டி மெங் கைதான அதே ஆண்­டில் உளவு வேலை பார்த்­த­தா­கச் சொல்லி சீனா இரு­வரை­யும் பிடித்து வைத்­தது.

அமெ­ரிக்கா பிறப்­பித்த கைதா­ணை­யைக் கொண்டு 2018ஆம் ஆண்­டில் திரு­வாட்டி மெங் கைது­செய்­யப்­பட்­டார்.

திரு­வாட்டி மெங்­கைக் கைது­செய்­த­தற்­குப் பதி­ல­டி­யாக கன­டி­யர்­க­ளைப் பிடித்­து­வைத்­த­தா­கச் சொல்­லப்­ப­டு­வதை பெய்ஜிங் மறுத்து­ வந்­துள்­ளது.

ஆனால் இந்­ந­ட­வ­டிக்­கை­யின் மூலம் சீனா அர­சி­யல் ரீதி­யாக பேரம் பேசு­வ­தா­கக் கவ­னிப்­பா­ளர்­கள் கூறி வரு­கின்­ற­னர்.

மைக்­கல் ஸ்பெ­வர், மைக்­கல் கொவ்­ரிக் ஆகிய இரு­வ­ரும் தாங்­கள் எந்­தத் தவ­றும் இழைக்­க­வில்லை எனத் தொடர்ந்து கூறி வந்­துள்­ள­னர்.

இரு­வ­ரும் நினைத்­துப் பார்க்க முடி­யாத அள­வி­லான சவால்­களை எதிர்­நோக்­கி­யி­ருப்­பதாகக் கன­டி­யப் பிர­த­மர் ஜஸ்­டின் ட்ரு­டோர் சொன்­னார்.

நேற்று காலை அவர்­கள் கன­டா­வைச் சென்­ற­டை­ய­வி­ருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

திரு கொவ்­ரிக், ஒரு முன்­னாள் தூதர். திரு ஸ்பெ­வர், வட­கொ­ரி­யா­வு­ட­னான கலா­சார உற­வு­க­ளுக்கு வகை­செய்­வது போன்ற விவ­கா­ரங்­க­ளைக் கையா­ளும் ஒரு நிறு­வ­னத்தை நிறு­வி­ய­வர்­களில் ஒரு­வர்.

ஈரா­னில் ஹுவா­வெய் நிறு­வ­னம் கையா­ண்ட வர்த்­தக விவ­கா­ரங்­க­ளின் தொடர்­பில் விசாரணை மேற்­கொள்­ளப்­பட்­ட­போது அமெ­ரிக்க அதி­கா­ரி­க­ளைத் திசை திருப்­பி­யதை விடு­விக்­கப்­படு­வ­தற்கு முன் திரு­வாட்டி மெங் ஒப்­புக்­கொண்­டார். கடந்த மூவாண்டு­க­ளாக அவர் கன­டா­வில் வீட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!