உலக கொவிட்-19 நிலவரம்

ஆஸ்திரேலியாவில் 2,355 கொவிட்-19 சம்பவங்கள்

மெல்பர்ன்/சிட்னி: ஆஸ்திரேலியாவில் புதிதாக 2,355 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த அங்கு அதிகமானோருக்குத் தடுப்பூசி போடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நியூசிலாந்தில் புதிய கொவிட்-19 சம்பவங்கள், ஆர்ப்பாட்டங்கள்

வெல்லிங்டன்: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் புதிதாக 27 பேருக்கு டெல்டா வகை கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. முடக்கநிலையைக் கண்டித்து அந்நாட்டில் சிலர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

போர்ச்சுகலில் தடுப்பூசி

போட்டுக்கொள்ளாதோர் இல்லை

லிஸ்பன்: போர்ச்சுகலில் தகுதி உள்ளவர்களில் சுமார் 98 விழுக்காட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எட்டே மாதங்களுக்கு முன்பு கிருமிப் பரவல் சூழலை சரியாகக் கையாளமுடியாமல் தவித்துக்கொண்டிருந்த போர்ச்சுகல் இப்போது முன்னுதாரணமாக விளங்குகிறது.

அமெரிக்காவை மிஞ்சியது ஹாங்காங்

ஹாங்காங்: ஹாங்காங், அதன் மக்களில் 55.8 விழுக்காட்டினருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்டுள்ளது. இது, அமெரிக்காவின் கொவிட்-19 தடுப்பூசி விகிதத்தைவிட அதிகம்.

கலிஃபோர்னியா: மாணவர்களுக்குத் தடுப்பூசி கட்டாயம்

சேக்ரமென்டோ: பள்ளி மாணவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதை அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலம் கட்டாயமாக்கியுள்ளது. அது, இவ்வாறு செய்துள்ள முதல் அமெரிக்க மாநிலம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!