சிங்கப்பூருடனான எல்லையை திறக்க மலேசியா திட்டம்

கோலா­லம்­பூர்: அனைத்­து­ல­கப் பய­ணி­க­ளுக்கு மலே­சியா அதல் எல்­லை­களை மீண்­டும் திறக்­கக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக, சிங்­கப்­பூ­ரு­ட­னான எல்­லையை மலே­சியா விரை­வில் திறக்­கக்­கூ­டும் என்­றும் அதை­ய­டுத்து சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து பய­ணி­கள் மலே­சி­யா­வுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­லாம் என்­றும் மலே­சிய சுற்­றுப்­ப­ய­ணத்­துறை, கலை­கள், கலா­சார அமைச்­சர் நேன்சி ஷுக்ரி தெரி­வித்­துள்­ளார்.

இரு அண்டை நாடு­க­ளுக்கு இடை­யி­லான எல்­லை­களை மீண்­டும் திறப்­பது குறித்து கலந்­து­ரை­யாட அமைச்­சர் நேன்சி ஷுக்ரி அடுத்த வாரம் சிங்­கப்­பூர் அதி­காரி ­க­ளைச் சந்­திக்க இருக்­கி­றார். சிங்­கப்­பூர்-மலே­சியா எல்லை அடுத்த மாதம் மீண்­டும் திறக்­கப்­படும் என்று அவர் கூறி­னார்.

அனைத்­து­லக பய­ணி­க­ளுக்­குத் தனது எல்­லை­களை அடுத்த மாதம் மீண்­டும் திறந்­து­விட மலே­சியா இலக்கு கொண்­டுள்­ளது. மலே­சி­யா­வுக்­குள் சிங்­கப்­பூர் பய­ணி­கள் முத­லில் அனு­ம­திக்­கப்­ப­டக்­கூ­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மலே­சி­யர்­க­ளுக்கு சிங்­கப்­பூர் அதன் எல்­லை­க­ளைத் திறந்­து­வைத்­தால், நாங்­களும் எங்­கள் எல்­லை­களை சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­குத் திறந்து வைத்­தி­ருப்­போம்," என்று சிஎன்­பிசி செய்தி நிறு­வ­னத்­தி­டம் அமைச்­சர் நேன்சி தெரி­வித்­தார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்கு முன்பு ஒவ்­வொரு நாளும் சிங்­கப்­பூ­ரை­யும் மலே­சி­யா­வை­யும் இணைக்­கும் உட்­லண்ட்ஸ் பாலத்­தை­யும் துவாஸ் பாலத்­தை­யும் பலர் வேலை நிமித்­த­மா­க­வும் குடும்­பத்­தி­ன­ரைச் சந்­திக்­க­வும் கடந்­த­னர்.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் எல்­லை­கள் மூடப்­ப­டு­வ­தற்கு முன்பு, சிங்­கப்­பூ­ருக்­கும் ஜோ

கூ­ருக்­கும் இடையே ஒவ்­வொரு நாளும் இரு­நா­டு­க­ளை­யும் சேர்ந்த ஏறத்­தாழ 500,000 பேர் பய­ணம் செய்­த­னர்.

எல்­லை­கள் மூடப்­பட்­ட­தும் சொந்த நாடு திரும்ப முடி­யா­மல் 100,000க்கும் மேற்­பட்ட மலே­சி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் இருப்­ப­தாக மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

எல்­லைக்கு அந்­தப் பக்­கம் உள்ள தங்­கள் குடும்­பத்­தி­ன­ரு­டன் மீண்­டும் இணைய அவர்­கள் ஆவ­லு­டன் காத்­துக்­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

அவ்­வப்­போது பய­ணம் செய்­யும் ஏற்­பாட்­டிக்­கீழ் தற்­போது இரு­நா­டு­க­ளுக்­கும் இடையே பய­ணம் மேற்­கொள்ள அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

அன்­புக்­கு­ரி­ய­வர்­கள் மர­ணம் அடைந்­தாலோ அல்­லது கடு­மை­யான நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தாலோ இத்­திட்­டத்­தின்­கீழ் பய­ணம் செய்­ய­லாம்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட மலே­சி­யர்­கள் லங்­காவி தீவுக்­குச் செல்ல மலே­சிய அர­சாங்­கம் கடந்த மாதம் அனு­மதி அளித்­தது.

அதை­ய­டுத்து, இம்­மா­தம் 16ஆம் தேதி நில­வ­ரப்­படி 128,000க்கும் அதி­க­மா­னோர் லங்­கா­விக்கு விமா­னம் மூல­மா­கவோ அல்­லது படகு மூல­மா­கவோ பய­ணம் மேற்­கொண்­ட­தாக திரு­வாட்டி நேன்சி தெரி­வித்­தார்.

இம்­மா­தம் 11ஆம் தேதி­யன்று மாநி­லங்­க­ளுக்­கி­டை­யி­லான பய­ணத் தடையை மலே­சியா நீக்­கி­யது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தால் பொரு­ளி­யலை உயிர்ப்­பிக்­கும் நட­வ­டிக்­கை­களில் அது தீவி­ரம் காட்டி வரு­கிறது.

தற்­போது பதின்­ம­வ­ய­தி­ன­ருக்கு தடுப்­பூ­சி­யை­யும் முதி­யோர் போன்ற பாதிப்­ப­டை­யும் அபா­யம் அதி­க­முள்ள பிரி­வி­ன­ருக்கு பூஸ்­டர் தடுப்­பூ­சி­யை­யும் மலே­சியா போட்டு வரு­கிறது.

நேற்­றைய நில­வ­ரப்­படி மலே­சி­யா­வில் மேலும் 5,828 கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!