வெளிநாட்டுப் பயணிகளுக்கு கதவைத் திறந்தது அமெரிக்கா

நியூ­யார்க்: குடும்­பங்­க­ளைப் பிரித்து, சுற்­று­லாவை முடக்கி, கிட்­டத்­தட்ட ஒன்­றரை ஆண்­டு­க­ளாக நீடித்த எல்லை கட்­டு­ப்பாடு அமெ­ரிக்­கா­வில் முடி­வுக்கு வந்­தது.

மகிழ்ச்­சி­ய­டைந்த பய­ணி­கள், உற­வு­க­ளைக் காண­மு­டிந்த, நிம்­மதி பெரு­மூச்­சு­விட்ட உற­வி­னர்­கள் என உணர்ச்­சி­மிக்க காட்­சி­களை அமெ­ரிக்க விமா­ன­நி­லை­யங்­க­ளி­லும் இதர எல்லை நுழை­வா­யில்­க­ளி­லும் பார்க்­க­மு­டிந்­தது.

அமெ­ரிக்கா-கனடா எல்­லை­யில் உள்ள ரெயின்போ பாலம் முதல் கலி­ஃபோர்­னி­யா­வின் சான் சிட்­ரோ­வில் உள்ள மெக்­சி­கோ­வின் டிஜு­வானா கடப்பு வரை உற­வி­னர்­கள், நட்­பு­க­ளைக் காண்­ப­தற்­காக மக்­கள் அணி வகுத்து நின்­ற­னர்.

நியூ­யார்க்­கின் ஜான் எஃப் கென்­னடி அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் தரை­யி­றங்­கிய முதல் ஐரோப்­பிய விமா­னத்­தி­லி­ருந்து பய­ணி­கள், ஆர­வா­ரத்­து­ட­னும் கைதட்­ட­லு­ட­னும் முனை­யத்­திற்­குள் நுழைந்­த­னர்.

"முதன்­மு­றை­யாகச் சென்ற ஆண்டு மார்ச் மாதம் விமா­னப் பய­ணத்­திற்கு முன்­ப­திவு செய்­தேன். கிரு­மிப் பர­வல் கார­ண­மாக அதிக கிட்­டத்­தட்ட 28 முறை மறு­ப­திவு செய்­தி­ருக்­கி­றேன். அதிக பணம் செல­வா­னது. ஆனால் இப்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கிறது," என்று இரண்டு ஆண்­டு­கள் கழித்து தன் மக­னைக் காண்­ப­தற்­காக ஹூஸ்­டன் செல்ல ஜெர்­மனி விமா­ன­

நி­லை­யத்­தில் காத்­தி­ருந்த ஹன்ஸ் வுல்ஃப் என்­ப­வர் சொன்­னார்.

இத்­த­ரு­ணத்­தைக் கொண்­டா­டும் வகை­யில் லண்­ட­னின் ஹீத்ரோ விமா­ன­நி­லை­யத்­தில் இருந்து நியூ­யார்க்­கிற்கு இரண்டு விமா­னங்­கள் ஒரே நேரத்­தில் புறப்­பட்­டன.

தேவை அதி­க­ரித்­துள்­ள­தை­ய­டுத்து, விமான நிறு­வ­னங்­கள் அதிக விமா­னங்­களை இயக்­க­வும் பெரிய விமா­னங்­க­ளைப் பயன்­ப­டுத்­த­வும் திட்­ட­மிட்டு வரு­கின்­றன.

கட்­டுப்­பா­டு­களால் அமெ­ரிக்கா-மெக்­சிகோ எல்­லை­யில் பல நக­ரங்­கள் பொரு­ளா­தார ரீதி­யில் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்­டன. ஆனால் எல்லை திறக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அப்­ப­கு­தி­களில் உள்ள சில நாணய மாற்று மையங்­கள் டாலர் பற்­றாக்­கு­றை­யால் பாதிக்­கப்­பட்­டன.

சென்ற திங்­கட்­கி­ழமை முதல், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் குடும்ப சந்­திப்பு அல்­லது சுற்­றுலா உட்­பட அத்­தி­யா­வ­சி­ய­மற்ற அமெ­ரிக்க பய­ணத்­தைத் தனி­மைப்­ப­டுத்­தல் இல்­லா­மல் மேற்­கொள்­ள­லாம் என்று அமெ­ரிக்கா கூறி­யி­ருந்­தது.

அதேசமயம் அமெரிக்காவிற்கு அத்­தி­யா­வ­சிய பய­ணம் மேற்­கொள்­வோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­றா­லும் அனு­ம­திக்­கப்­

ப­டு­வர் என்­றும் கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!