ஓமிக்ரான்: புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த ஆஸ்திரேலியா

மெல்­பர்ன்: தெற்கு ஆப்­பி­ரிக்க நாடு­களில் ‘ஓமிக்­ரான்’ என்று பெயர் ­இ­டப்­பட்­டுள்ள புதிய உருமாறிய கிருமி பல­ரைப் பாதித்து வரு­வ­தால் அங்­கி­ருந்து வரும் பய­ணி ­க­ளுக்கு உலக நாடு­கள் தடை விதித்து வரு­கின்­றன.

அந்த வரி­சை­யில் ஆஸ்­தி­ரே­லியாவும் புதிய கட்­டுப்­பா­டு­களை விதித்­துள்­ளது.

தென்­னாப்­பி­ரிக்கா, நமி­பியா, ஸிம்­பாப்வே, போட்ஸ்­வானா, லெசோத்தோ, எஸ்­வாட்­டினி, சீஷெல்ஸ், மொசாம்­பிக் உள்­ளிட்ட நாடு­களில் புதிய கிருமி தலை­காட்டி­ யி­ருக்­கிறது.

இந்நிலையில் தெற்கு ஆப்­பி­ரிக்க நாடு­களில் இருந்து வரும் ஆஸ்­தி­ரே­லிய குடி­மக்­கள் அல்­லாத பய­ணி­கள் நாட்­டில் நுழைய தடை விதிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் இந்­தக் கட்டுப்­பாடு உட­ன­டி­யாக அம­லுக்கு வரு­வ­தா­க­வும் ஆஸ்­தி­ரே­லியா நேற்று அறிவித்தது.

ஆனால் ஆஸ்­தி­ரே­லிய குடி­மக்­களும் அவர்­க­ளைச் சார்ந்து இருப்­போ­ரும் நாடு திரும்­பி­ய­தும் 14 நாட்­கள் தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

புதிய விதி­மு­றை­கள் அனைத்­து­லக மாண­வர்­க­ளுக்­கும் வெளி­நாட்­டுத் திற­னா­ளர்­க­ளுக்­கும் பொருந்­தும்.

கடந்த 14 நாள்­களில் அத்­த­கைய நாடு­க­ளி­லி­ருந்து ஏற்­கெ­னவே ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வந்­தி­ருந்­தால் அவர்­கள் உடனே தனி­மைப்­ப­டுத்­திக் கொண்டு பரி­சோ­தனை செய்ய­வேண்­டும் என்­று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே புதிய உரு­மா­றிய கிரு­மி­யால் தனது நாடு பலி­கடா ஆக்­கப்­பட்­டுள்­ள­தாக தென்­னப்­பி­ரிக்க சுகா­தார அமைச்­சர் ஜோ பாஹ்லா வேதனை தெரி­வித்­துள்­ளார். குறிப்­பாக ஐரோப்­பிய நாடு­கள் தென்­னாப்­பி­ரிக்­கா­வுக்கு எதி­ராக பய­ணத் தடைகளை விதித்­துள்­ளன.

“இது நியா­ய­மற்­றது. உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் நியதி­க­ளுக்கு எதி­ரா­னது,” என்று வெள்­ளிக் கிழமை செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அைமச்­சர் ெதரிவித்தார்.

பிரிட்­டன் மட்டுமல்லாமல் பல நாடு­கள் தெற்கு ஆப்­பி­ரிக்­கா­வுக்­கான விமா­னச் சேவை­களை நிறுத்­தி­யுள்­ளன.

இதற்கிடையே புதிய ஓமிக்­ரான் கிரு­மியை தற்­போ­துள்ள தடுப்­பூ­சி­களால் கட்­டுப்­ப­டுத்த முடியுமா என ஆரா­யப்­பட்டு வரு­கிறது.

தென்­னாப்­பி­ரிக்­கா­வில் கண்டறி­யப்­பட்­டுள்ள கவ­லை­ய­ளிக்­கும் புதிய கிருமி பற்றி அதிக தரவுகள் தேவைப்­ப­டு­வ­தாக பயோ­என்­டெக் கூறியது.

அதன் பிறகே ஃபைசரு­டன் சேர்ந்து தயா­ரிக்­கப்­படும் தடுப்­பூ­சி­ யில் மாற்­றம் தேவையா என்­பது பற்றி முடிவு செய்ய முடியும் என்று அந்­நி­று­வ­னம் தெரி­வித்­தது.

அவசியம் ஏற்­பட்­டால் நூறு நாட்­களில் புதிய கிரு­மிக்கு எதிரான தடுப்பூசிகளைத் தயாரிக்க முடியும் என்று ஃபைசர், பயோ­என்­டெக் ஆகிய இரண்டும் தெரிவித்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!