நஜிப் புகார்: ஆதாரங்களை மறைக்க நடந்த முயற்சி

நஜிப் புகார்: ஆதாரங்களை மறைக்க நடந்த முயற்சி

2 mins read
4447b47b-592b-455a-9a71-59b37e7c0017
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தனது ஆதாரங்களை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை விசாரிக்க வேண்டும் என்று போலிசில் புகார் அளித்துள்ளார். படம்: என்எஸ்டி -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக், 1எம்­டிபி தொடர்­பான வழக்­கு­களில் தனது ஆதா­ரங்­களை மறைக்க முன்­னைய பக்­கத்­தான் ஹரப்­பான் நிர்வாகம் மேற்­கொண்ட முயற்­சி­களை விசா­ரிக்க வேண்­டும் என்று நேற்று போலி­சில் புகார் அளித்­துள்­ளார்.

இந்த வழக்­கில் மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­ந­ரின் குடும்­பத்­துக்கு உள்ள தொடர்பு குறித்து விசா­ரிக்­கப்படாததால் தாம் ஏமாற்றம் அ­டைந்துள்ள தாகவும் அவர் தெரி­வித்­தார்.

டேங் வாங்கி போலிஸ் நிலை­யத்­தில் நேற்று புகார் அளித்த பிறகு நஜிப் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

சிங்­கப்­பூர் அதி­கா­ரி­க­ளால் திருப்பி­ய­ளிக்­கப்­பட்ட ஜோ லோ மற்றும் 1எம்­டி­பி­யு­டன் தொடர்பு இருப்பதாகக் கூறப்­படும் 65 மில்­லி­யன் ரிங்­கிட் விவ­கா­ரத்­தில் மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­ந­ரின் நெருங்­கிய குடும்­பத்­துக்கு சில தொடர்­பு­கள் இருப்­ப­தாக கடந்த வாரம் ஊழல் தடுப்­புப் பிரிவு கூறி­யி­ருந்தது.

இதனைச் சுட்டிக்காட்டிய அவர், மலே­சி­யர்­களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாகக் கூறினார்.

"ஜோ லோவு­டன் ஆளு­ந­ருக்கு இருந்த தொடர்பு பற்­றியோ அல்­லது நான் பிர­த­ம­ராக இருந்­த­போது அவரை முழு­மை­யாக நம்­பிய சம­யத்­தில் அவர்­க­ளுக்கு இடை­யி­லான தொடர்பு பற்­றியோ விசாரிக்கப்படாதது என்­னை­விட வேறு யாரும் ஏமாற்­ற­ம­டைய முடி­யாது.

"முன்­னாள் தலை­மைச் சட்ட அதி­கா­ரி­யான டாமி தாம­சும் தாம் பத­வி­யில் இருந்­த­போது அவர்­க­ளுக்கு இடையிலான பரி­வர்த்­த­னை­கள் குறித்து தனக்­குத் தெரி­யும் என்று கூறி­யி­ருப்­பது மேலும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்தி இருக்­கிறது.

"முந்­தைய பக்­கத்­தான் ஹரப்­பான் நிர்­வா­கத்­தில் குறைந்­தது 2019ஆம் ஆண்­டி­லி­ருந்து போலி­சா­ருக்கு இது குறித்து தெரி­யும். ஆனால் கிட்­ட­தட்ட 2021 இறுதி வரை இந்த விவகாரத்தில் விசா­ரணை நடைபெற்று வரு­வ­தாக கடந்த திங்கள்கிழமை சட்ட அமைச்­சர் வான் ஜுனைடி நாடாளு மன்றத்தில் கூறி இருந்­தார்.

"இத்­த­கைய தக­வல்­கள் எனக்­குத் தெரி­யா­மல் இருந்தன. முன்பே தெரிந்­தி­ருந்­தால் எனக்கு எதி­ரான வழக்­கு­களில் தற்­காப்பு வாதத்­திற்கு என்­னு­டைய சட்­டக் குழு­வி­னர் அதை பயன்­ப­டுத்­தி­யி­ருக்கலாம்," என்றார் திரு நஜிப். தன்னுடைய ஆதாரங்களை மறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை போலிசார் விசாரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.