கட்டணங்களை விமான நிறுவனங்கள் குறைக்க மலேசிய அமைச்சர் வலியுறுத்து

புத்­ரா­ஜெயா: நாட்­டில் உள்ள விமான நிறு­வ­னங்­கள் அர­சாங்­கத்­தின் தலை­யீடு இல்­லா­மல் கட்­ட­ணங்­களைக் குறைக்க வேண்­டும் என்று மலே­சிய போக்­கு­வ­ரத்து அமைச்­சர் வீ க சியோங் நேற்று வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதிவு வழி­யாக கேட்­டுக் கொண்­டார்.

தற்­போ­தைய விமா­னப் பய­ணங் களுக்­கான கட்­ட­ணம், குறிப்­பாக சர­வாக்­குக்­கான கட்­ட­ணம் பயணி களுக்கு பெரும் சுமை­யாக இருக்­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார்.

இவ்­வாண்டு இறு­தி­யி­லும் அடுத்த ஆண்டு முற்­ப­கு­தி­யி­லும் வரும் விடு­மு­றைக் காலத்­தில் விமா­னப் பய­ணக் கட்­ட­ணங்­கள் அதி­க­மாக இருக்­கும் என்று பய­னீட்­டா­ளர்­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர். இது அர­சாங்­கத்­திற்­கும் கவ­லை­ய­ளிக்­கிறது. கொள்­ளை­நோய் கார­ண­மாக நீண்­ட­கா­லத்­திற்­குப் பிறகு குடும்­பத்­து­டன் இணை­யும் பய­ணி­களை கட்­டண உயர்வு வெகு­வா­கப் பாதிக்­கும்," என்று அமைச்­சர் கூறி­னார்.

சர­வாக்­கில் உள்ள அர­சாங்க சார்­பற்ற அமைப்­பு­களும் விமான நிறு­வ­னங்­க­ளின் அதி­கப்­ப­டி­யான கட்­ட­ணம் குறித்து அண்­மை­யில் கவலை எழுப்­பி­யி­ருந்­தன.

இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண விமான நிறு­வ­னங்­க­ளு­டன் அர­சாங்­கம் ஆலோ­சனை நடத்­தி­யுள்­ளது.

மலே­சிய ஏர்­லைன்ஸ், ஏர் ஏஷியா, மலிண்டோ ஆகி­ய­வற்­று­டன் நடந்த கூட்­டத்­தில் கட்­ட­ணத்­தைக் குறைக்க வலி­யு­றுத்­தப்­பட்­டது.

மலே­சிய ஏர்­லைன்ஸ் சர­வாக்­குக்கு கூடு­தல் சேவை­களை வழங்க உறு­தி­ய­ளித்­துள்­ளது. இத­னால் கட்­ட­ணங்­கள் குறைய வாய்ப்­புள்­ளது. மலே­சிய விமா­னப் போக்கு வரத்து ஆணை­ய­மும் கூடு­தல் சேவை­க­ளுக்கு ஒப்­பு­தல் வழங்கத் தயா­ராக உள்­ளது என்று திரு வீ தெரி­வித்­தார்.

கொள்­ளை­நோ­யால் ஏற்­பட்­டுள்ள இழப்பை ஈடு­செய்­வ­தற்­காக கட்­ட­ணம் உயர்த்­தப்­ப­டு­வ­தாக பர­வ­லாக மக்­கள் நம்­பு­கின்­ற­னர். அவற்­றைப் போக்­கும் வகை­யில் விமா­னத் துறை­யி­னர் கட்­டண உயர்­வு­க­ளைத் தவிர்க்க வேண்­டும் என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!