ஓமிக்ரான் கிருமியால் உலக நாடுகள் அச்சம்

வாஷிங்­டன்: புதி­தாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள 'ஓமிக்­ரான்' கிரு­மி­ யால் உலகம் முழு­வ­தும் அச்­சம் ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்­கங்­கள் மீண்­டும் புதிய கிரு­மி­யால் மக்­கள் பாதிக்­கப்­ப­டா­மல் இருக்க தடுப்பு நட­வ­டிக்­கை­களை முடுக்­கி­விட்­டுள்­ளன.

அதி­வே­கத்­தில் பர­வக்­கூ­டிய ஓமிக்­ரான் கிருமி தென்­னாப்­பி­ரிக்­கா­வில் முதல் முறை­யாக கண்­டறி­யப்­பட்­டது.

அதன் பிறகு ஆஸ்­தி­ரே­லியா, பிரிட்­டன், ஜெர்­மனி, இஸ்­ரேல், இத்­தாலி, செக் குடி­ய­ரசு, ஹாங்­காங் உள்­ளிட்ட நாடு­களில் அது பரவி வருகிறது.

இஸ்ரேல் முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளி­நாட்­டுப் பய­ணி­களுக்கும் தடை விதித்துள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.

இஸ்­ரே­லில் இது­வரை ஏழு பேர் ஓமிக்­ரான் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் எனச் சந்­தே­கிக்­கப்­ ப­டு­கிறது. மலா­வி­யி­லி­ருந்து திரும்­பிய மற்­றொ­ரு­வ­ருக்­கும் புதிய கிருமிப் பாதிப்பு இருந்­தது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் இரண்டு ஓமிக்­ரான் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

தென்­னாப்­பி­ரிக்­கா­வி­லி­ருந்து சிட்­னிக்­குத் திரும்­பிய இரு­வர் புதிய கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­டனர் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகா­தார அதி­கா­ரி­கள் நேற்று தெரி­வித்­த­னர்.

தென்­னாப்­பி­ரிக்­கா­வி­லி­ருந்து ஏற்கெனவே நாடு திரும்­பிய இதர 12 பயணிகளு­டன் சேர்த்து அவர்­களும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

இரு பய­ணி­களும் முழு­மைாகத் தடுப்­பூசி போட்­ட­வர்­கள். அவர்­ களி­டம் கிரு­மித் தொற்­றி­ய­தற்­கான அறி­குறி எதுவும் இல்லை என்று அதி­கா­ரி­கள் மேலும் தெரி­வித்­த­னர். இந்த நிலை­யில் கடந்த 14 நாட்­களில் ஒன்­பது ஆப்­பி­ரிக்க நாடுகளுக்­குச் சென்ற பய­ணி­கள் நாட்­டுக்­குள் நுழைய அனு­ம­தி­யில்லை என்று ஆஸ்­தி­ரே­லியா புதிய உத்தரவை பிறப்­பித்­தது.

தென்­னாப்­பி­ரிக்கா, லெசோத் தோ, போட்ஸ்­வானா, ஸிம்­பாப்வே உட்பட ஆப்பிரிக்க நாடுகளின் பயணிகள் அனுமதிக்கப்பட மாட் டார்கள்.

தென் கொரி­யா­வும் எட்டு ஆப்­பி­ரிக்க நாடு­க­ளைச் சேர்ந்த பய­ணி­க­ளுக்கு புதிய கட்­டுப்­பா­டு­களை அறிவித்துள்ளது. தென்­னாப்­ பிரிக்கா, போட்ஸ்­வானா, நமி­பியா, ஸிம்­பாப்வே, லெசோத்தோ, எஸ்­வாட்­டினி, மாலவி மற்­றும் மொஸாம்­பிக்­கி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்கு அனு­ம­தி­யில்லை என்று தென்­கொரி­ய நோய்க் கட்­டுப்­பாடு, தடுப்பு முகவை தெரி­வித்­தது.

தெற்கு ஆப்­பி­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து வரும் குடி­மக்­களும் அர­சாங்­கம் ஏற்­பாடு செய்­துள்ள இடத்­தில் பத்து நாட்­கள் தங்க வேண்­டும் என்று முகவை கூறி­யது.

ஐரோப்­பிய நாடு­களும் உரு­மா­றிய கிரு­மிக்கு எதி­ராக புதிய கட்டுப்­பா­டு­களை அறி­வித்து உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!