வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மலேசிய மக்கள்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் பெய்த கன­மழை கார­ண­மாக தங்­களின் வீடு­க­ளை­விட்டு வெளி­யே­றிய பலர் பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். இருப்­பி­னும் ஒரு சில இடங்­களில் வெள்­ளத்­தை­விட்டு வெளி­யேற முடி­யா­மல் சிலர் தவித்தனர்.

பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்ட ஆட­வர் ஒரு­வர் வெள்ள நீரால் ‌சூழப்­பட்ட வீட்­டிற்­குள் தவிப்­பது, தாயும் பிள்­ளை­யும் காரின் பின்­பு­றத்­தில் மீட்­புக் குழு­வி­ன­ருக்­காக காத்­துக்­கொண்­டி­ருப்­பது போன்ற இணை­யத்­தில் பகி­ரப்­பட்­டுள்ள படங்­கள் மலே­சிய வெள்­ளத்­தில் சிக்­கித் தவிப்­ப­வர்­க­ளின் நிலை­யைக் காட்­டு­கின்­றன.

வெள்­ளம் சூழ்ந்­துள்ள ஹுலு லங்­காட்­டில் உள்ள தாமன் ஸ்ரீ நன்­திங் பகு­தி­யைச் சேர்ந்த மீட்­புக் குழு­வி­ன­ரின் உத­விக்­காக காத்­துக் கொண்­டி­ருந்த கிட்­டத்­தட்ட 100 பேர், 12 மணி நேரத்­திற்­கும் மேல் வழி­பாட்­டுத் தலத்­தின் மேற்கூரை­யில் சிக்­கித் தவித்­த­னர்.

இதற்­கி­டையே, மனதை நெகிழ வைக்­கும் சம்­ப­வங்­களும் அரங்கேறின.

வெள்ளம் சூழ்ந்த தங்­கள் வீடு­க­ளை­விட்டு வெளி­யேறி பல கிலோ மீட்­டர் நடந்­து­சென்ற நால்­வ­ரைக் காரில் சென்ற ஒரு­வர் அழைத்­துச் சென்ற காணொ­ளி­யும் சமூக ஊட­கத்­தில் பகி­ரப்­பட்­டி­ருந்­தது.

உணவு விநி­யோக பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த ஒரு­வர் ஏழு பூனை­க­ளைக் காப்­பாற்­றிய சம்­ப­வ­மும் பல­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­தது.

இதற்­கி­டையே, வெள்ள பாதிப்பு சீர­மைப்பு பணி­க­ளுக்­காக 200 மில்­லி­யன் ரிங்­கிட் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. பாதிக்கப்பட்ட குடும்­பங்­க­ளுக்கு 1,000 ரிங்­கிட் நிதி உதவி வழங்­கப்­படும் என்றார் மலே­சியப் பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்கோப்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!