நியூசிலாந்தில் ஓமிக்ரான் அச்சம்

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வர், தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டா­மல் வழக்­க­மான பணி­களில் ஈடு­பட்­ட­தால் சமூ­கத்­தில் ஓமிக்­ரான் கிருமி பர­வி­யி­ருக்­க­லாம் என்ற அச்­சம் ஏற்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 16ஆம் தேதி பிரிட்­ட­னி­லி­ருந்து அவர் நியூ­சி­லாந்துக்கு வந்தார். இரண்டு நாள்­க­ளுக்­குப் பிறகு அதா­வது, டிசம்­பர் 17ஆம் தேதி நடந்த சோத­னை­யில் அவ­ருக்கு ஓமிக்­ரான் தொற்று இருப்­பது உறுதி செய்யப்பட்டதாக நியூ­சி­லாந்­தின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

அந்த இடை­ப்பட்ட காலத்­தில் அவர் ஆக்­லாந்­தில் இருந்­துள்­ளார். ஆனால் அவர் மூலம் தொற்று பரவி­யி­ருக்­க­லாம் என்­பது இன்­னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

நியூ­சி­லாந்­தில் இது­வரை சமூ­கத்­தில் ஓமிக்­ரான் தொற்று ஏற்பட வில்லை. எல்­லை­யில் உள்ள தனி­மைப்­ப­டுத்­தப்­படும் இடங்­களில் மட்­டும் 17 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

இதற்­கி­டையே ஆஸ்­தி­ரே­லி­யா­வின் நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 11,201 கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

முன்­னைய நாளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 87 விழுக்­காடு அதி­கம். மருத்­து­வ­ம­னை­களில் நோயா­ளி­கள் அதிகரித்து வருவதால் சுகாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சோதனை நிலை­யங்­க­ளுக்­கும் தேவை அதி­க­ரித்­துள்­ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநில முதல்­வர் டொமி­னிக் பேராட்­டெட், பெரி­ய­வர்­களில் ஏறக்­கு­றைய 95 விழுக்­காட்­டி­னர் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுள்­ள­தால் மருத்­து­வ­ம­னை­கள் நிரம்ப வாய்ப்பு இல்லை என்று கூறி­யுள்­ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மருத்­து­வ­ ம­னை­யில் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்ட 625 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

"நம்­பிக்­கை­ய­ளிக்­கும் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. முன்­னைய டெல்டா கிரு­மி­யு­டன் ஒப்­பி­டு­கை­யில் ஓமிக்ரான் பாதிப்பு ஐந்­தில் ஒரு பங்கு மட்­டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன," என்று திரு டொமி­னிக் தெரி­வித்து உள்­ளார்.

கிரு­மிப் பர­வ­லைக் குறைக்க மாநி­லத்தை முடக்க ேவண்­டிய அவ­சி­யம் இல்லை என்­றும் அவர் சொன்­னார்.

இதற்­கி­டையே பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் உள்பட ஆஸ்­தி­ரே­லி­யா­வின் எட்டு மாநில முதல்­வர்­கள் இன்று கிரு­மிப்பர­வல் நில­வ­ரம் குறித்து விவா­திக்­க­வி­ருக்­கின்­ற­னர்.

அப்­போது, புதிய கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கா­மல் கிரு­மிப் பர­வலை எப்­படி சமா­ளிப்­பது என்பது குறித்து அவர்கள் பேசுவார்கள் எனத் தெரி­கிறது.

பெரும்­பா­லான மாநி­லங்­கள், கிரு­மி­யு­டன் வாழப் பழ­கிக்கொள்ள வேண்­டும் என்ற நிலைக்கு மாறி வரு­கின்­றன. கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க தடுப்­பூசி ஒன்றே சிறந்த வழி என்­றும் ஆஸ்­தி­ரே­லிய மாநில அர­சாங்­கங்­கள் நம்­பு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!