டென்னிஸ் வீரர்களின் விசா மீது ஆஸ்திரேலியா விசாரணை

சிட்னி: டென்­னிஸ் வீரர் ஜோக்­கோ­விச்­சின் விசாவை ஆஸ்­தி­ரே­லி­யா­ரத்து செய்­த­தைத் தொடர்ந்து, மற்ற வெளி­நாட்டு டென்­னிஸ் வீரர்­க­ளின் விசா குறித்­தும் ஆஸ்­தி­ரே­லியா விசா­ரித்து வரு­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வ­தி­லி­ருந்து விலக்களிக்­கும் திட்டத்தின்­கீழ் நாட்­டிற்­குள் நுழைந்த மேலும் இரண்டு வீரர்­க­ளின் சான்­றி­தழ்­களை ஆஸ்­தி­ரே­லிய எல்­லைப் படை ஆராய்ந்து வரு­வ­தாக உள்­துறை அமைச்­சர் கரேன் ஆண்ட்­ரூஸ் சொன்­னார்.

ஆனால், ஜோக்­கோ­விச்­சைப் போலவே, தடுப்­பூ­சிக்­கான மருத்துவ விலக்கு அளிக்­கப்­பட்ட மூவர் ஏற்­கெ­னவே ஆஸ்­தி­ரே­லி­யா­விற்­குள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அடுத்த வாரம் மேலும் பலர் வரக்­கூ­டும் என்­றும் தக­வல்­கள் கூறி­ய­தாக ராய்ட்­டர்ஸ் தெரி­வித்­தது.

ஜோக்­கோ­விச், தடுப்­பூசி விலக்கு அளிக்­கப்­பட்­ட­தற்­கான சான்­று­க­ளைச் சமர்ப்­பிக்­க­வில்லை என்­ப­தால் அவ­ருக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தாக ஆஸ்­தி­ரே­லியா கூறி­யது.

இந்­நி­லை­யில், ஆஸ்­தி­ரே­லிய பொது­வி­ரு­துப் போட்­டி­யில் கலந்­து­கொள்ள சென்ற ஜோக்­கோ­விச்சை 'குற்­ற­வா­ளியை நடத்­து­வது' போல் நடத்­த­வேண்­டாம் என்று ஆஸ்­தி­ரே­லி­யா­வி­டம் செர்­பியா கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

தடுப்பு மையத்­தில் தங்க வைக்­கப்­பட்­டுள்ள ஜோக்­கோ­விச்சை, நல்ல தங்­கு­வி­டு­திக்கு மாற்­று­மா­றும் அது கேட்­டுக்­கொண்­டது.

செர்­பியா தொடர்­பான எந்­த­வொரு குறிப்­பிட்ட நிலைப்­பாட்­டின் கார­ண­மா­க­வும் ஜோக்­கோ­விச்­சின் விசா ரத்து செய்­யப்­ப­ட­வில்லை என்று ஆஸ்­தி­ரே­லிய பிர­த­மர் ஸ்காட் மோரி­சன் தெரி­வித்­தார்.

ஜோக்­கோ­விச்­சின் விசா குறித்து மீண்­டும் நாளை மறு­நாள் விசா­ரிக்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!