ஓமிக்ரான்: மீண்டும் தொற்றுக்கு ஆளாவோர் அதிகரிப்பு

லண்டன்: ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மித் தொற்று வேக­மாக பரவி வரு­வ­தால், ஏற்­கெ­னவே கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோ­ருக்கு மீண்­டும் தொற்று ஏற்­படும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து வரு­வ­தாக ஆராய்ச்­சி­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

கடந்த வாரம் ஓமிக்­ரான் தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 10 முதல் 15 விழுக்­காட்­டி­னர் ஏற்­கெ­னவே வேறு வகை கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் என்று லண்­டன் இம்­பீ­ரி­யல் கல்­லூ­ரி­யின் தொற்­று­நோய் துறை நிபு­ண­ரான பேரா­சி­ரி­யர் நீல் பெர்­கு­சன் சொன்­னார்.

ஆனால், இது­வரை யாரும் இரண்டு முறை ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­தற்­கான சான்­று­கள் எது­வும் இல்லை என்று கூறப்­பட்­டு

உள்­ளது.

ஆனால் ஓமிக்­ரா­னின் வேக­மா­கப் பர­வும் தன்மை, நோய் எதிர்ப்பு திற­னைக் குறைக்­கும் தன்மை ஆகி­ய­வற்­றின் கார­ண­மாக மீண்­டும் ஒரே வகை கிரு­மித் தொற்­றுக்கு ஆளா­வ­தற்­கான வாய்ப்பு உள்­ள­தாக சுகா­தார அதி­கா­ரி­கள் கவலை தெரி­வித்­துள்­ள­னர்

தற்­போ­தைய காலக்­கட்­டத்­தில், ஒரே சம­யத்­தில், ஓமிக்­ரா­னா­லும் இன்­னோர் உரு­மா­றிய கிரு­மி­யா­லும் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ளது குறித்­தும் அவர்­கள் கவலை கொண்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வில் ஒரே நாளில் 1.35 மில்­லி­யன் பேர் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர். உல­க­ள­வில் எந்­த­வொரு நாட்­டை­யும்­விட ஆக அதிக அன்­றாட தொற்று எண்­ணிக்­கை­யா­கும் இது.

ஜன­வரி 3ஆம் தேதி­யன்று அங்கு 1.03 மில்­லி­யன் தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­னதே ஆக அதி­க­மாக இருந்­தது.

ஏழு நாள் சரா­சரி இரண்டு வாரங்­களில் மும்­ம­டங்­கா­கி­யுள்­ளது அமெ­ரிக்­கா­வில் கிரு­மித்­தொற்று தற்­போ­தைக்கு குறை­வ­தாக தெரி­ய­வில்லை என்­ப­தைக் காட்­டு­கிறது.

உலக அள­வில் கிரு­மித்­தொற்­றால் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை உச்­சத்தை எட்­டி­யுள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் கிரு­மித்­தொற்­றுக்­குச் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை ஆக அதி­க­மாக 132,000க்கும் மேல் பதி­வா­னது.

பிரான்சில் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை கடந்த ஆண்டு ஏப்­ர­லுக்­குப் பிறகு தற்­போது மீண்­டும் அதி­க­ரித்­துள்­ளது.

ஸ்பெ­யினி­லும் கடந்த ஆண்­டைப் ­போன்று மருத்துவமனை களில் நெருக்­க­டி­ நிலை திரும்­பும் என அஞ்­சப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!