‘ஓமிக்ரான் ஆபத்தானது’

கிருமிப் பரவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜெனிவா: ஓமிக்­ரான் கிருமி ஆபத்­தா­னது என்று கூறி­யுள்ள உல­கச் சுகா­தார நிறு­வ­னம், குறிப்­பாக, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளுக்கு ஆபத்­து­மிக்­கது என்று எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

டெல்­டா­வை­விட வேக­மாக பர­வக்­கூ­டிய ஓமிக்­ரான் கிரு­மிப் பர­வல் கார­ண­மாக உல­க­ள­வில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்து உள்­ள­தாக கூறி­யது.

உல­கம் முழு­வ­தும் கடந்த வாரம் 15 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­கின. அத்­து­டன் மில்­லி­யன்­க­ணக்­கான தொற்று சம்­ப­வங்­கள் பதிவு செய்­யப்­ப­டா­மல் போயி­ருக்­கக்­கூ­டும் என்­றும் கரு­தப்­ப­டு­கிறது.

கொவிட்-19 கிரு­மித்­தொற்றை நிரந்­த­ர­நோ­யாக கையா­ளு­வ­தற்­கான வழி­யாக இது இருக்­கும் என்ற கருத்தை நிரா­க­ரித்த நிறு­வ­னம், கிரு­மித்­தொற்றை முழு­வ­து­மாக ஏற்­றுக்­கொண்­டு­வி­டக்­கூ­டாது என்­றும் வலி­யு­றுத்­தி­யது.

“ஓமிக்­ரான், டெல்­டா­வை­விட குறை­வான பாதிப்­பையே ஏற்­ப­டுத்­தி­னா­லும் அது ஆபத்­தா­னது அது­வும் குறிப்­பாக, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­க­ளுக்கு.

“உல­க­ள­வில் பலர் இன்­ன­மும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத நிலை­யில், கிரு­மிப் பர­வு­வ­தற்கு நாம் இடம் தரக்­கூ­டாது.

“மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் பெரும்­பா­லா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள்,” என்­றார் உல­கச் சுகா­தார நிறு­வ­னத்­தின் தலை­வர் டெட்­ரோஸ் அத­னோம்.

இதற்­கி­டையே, அமெ­ரிக்­கா­வில் தீவிர சிகிச்சை தேவைப்­படும் பதின்ம வய­தி­னர்­களில் கிட்­டத்­தட்ட அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் என்­கிறது ஆய்வு ஒன்று.

12 முதல் 18 வய­துக்­குட்­பட்ட 1,000க்கும் மேற்­பட்ட பதின்ம வய­தி­ன­ரி­டம் நடத்­தப்­பட்ட ஆய்­வில் தடுப்­பூசி, தீவிர சிகிச்சை தேவைப்­ப­டு­வோர் விகி­தத்தை 98 விழுக்­கா­டும் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் விகி­தத்தை 94 விழுக்­கா­டும் குறைத்­த­தாக நியூ இங்­கி­லாந்து மருத்­துவ சஞ்­சி­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தனது தயா­ரிப்­பான வேக்ஸ்­ஸெ­வே­ரியா தடுப்­பூசி, ஓமிக்­ரா­னுக்கு எதி­ராக அதிக ஆன்­டி­பா­டி­களை உரு­வாக்­கு­வ­தாக மருத்­துவ பரி­சோ­த­னை­யின் முதற்­கட்ட தர­வு­கள் கூறு­வ­தாக ஆஸ்ட்­ரா­ஸெ­னிக்கா தெரி­வித்­தது.

மூன்­றா­வது தடுப்­பூ­சி­யாக அதைப் போட்­டுக்­கொள்­ளும்­போது, ஓமிக்­ரான் மட்­டு­மல்­லா­மல், மற்ற உரு­மா­றிய கிரு­மிக்கு எதி­ராக அதிக ஆன்­டி­பா­டி­களை உரு­வாக்­கு­வ­தாக அது கூறி­யது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!