டிரம்ப்பின் உரையைக் கேட்க திரண்ட ஆதரவாளர்கள்

டிரம்ப்பின் உரையைக் கேட்க திரண்ட ஆதரவாளர்கள்

1 mins read
09020226-6bb2-48a3-a595-11be2ca4e1ab
-

ஃபுளோரன்ஸ்: அமெ­ரிக்­கா­வின் அரி­சோனா மாநி­லத்­தில் திரண்­டி­ருந்த தனது ஆத­ர­வா­ளர்­க­ளி­டையே முன்­னாள் அதி­பர் டொனால்ட் டிரம்ப் உரை­யாற்­றி­னார்.

டிரம்ப்­பின் உரை­யைக் கேட்­பதற்­காக ஃபுளோரிடா, டெக்­சா­ஸில் இ­ருந்து சில ஆத­ர­வா­ளர்­கள் ஒரு சில நாள்­கள் முன்­ன­தா­கவே பேரணி நடக்கும் இடத்­திற்­குச் சென்­று­விட்­ட­னர்.

2020 அமெ­ரிக்க அதி­பர் தேர்தலில் தாம் வென்­ற­தாக தனது உரை­யில் டிரம்ப் மீண்­டும் வலி­யுறுத்­தி­னார்.

"தீவிர ஜன­நா­ய­க­வா­தி­கள் அமெ­ரிக்­காவை ஒரு கம்­யூ­னிஸ்ட் நாடாக மாற்ற விரும்­பு­கி­றார்­கள்.

"தேர்­த­லில் நாம் மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பெற்­றோம். அதை அவர்­கள் பறித்­து­க்கொள்­ள­விட மாட்­டோம்," என்­றார் அவர்.

வரும் நவம்­பர் மாதம் அமெ­ரிக்கா இடைத் தேர்­த­லைச் சந்­திக்­க­வுள்ள நிலை­யில் டிரம்ப்­பின் இந்த பேரணி நடந்­துள்­ளது.

இத்­தேர்­த­லில் போட்­டி­யி­ட­வுள்ள குடி­ய­ரசு கட்­சி வேட்பாளர்கள் சிலர் இந்த பேரணியில் உரையாற்றினர், அவர்கள் அதி­பர் ஜோ பைடனை பல­வீ­ன­மா­ன­வர், குழப்­ப­மா­ன­வர் என்று சாடி­னர்.