டோங்காவில் நீர், உணவுக்குத் தட்டுப்பாடு; நாடுகள் உதவிக்கரம்

வெலிங்­டன்: கட­லுக்­க­டி­யில் ஏற்­பட்ட எரி­மலை வெடிப்­பால் பேர­ழி­வைச் சந்­தித்த டோங்­கா­வில் நீருக்­கும் உண­வுக்­கும் தட்­டுப்­பாடு நிலவு­கிறது.

அங்கு அவ­சர உத­விக்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அடுத்த சில நாட்­களில், நிவா­ர­ணப் பொருட்­க­ளு­டன் மேலும் பல கப்­பல்­களும் விமா­னங்­களும் அங்கு சென்­ற­டை­யும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

நிவா­ர­ணப் பொருட்­க­ளு­டன் சென்ற ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து விமா­னங்­கள் நேற்று முன்­தி­னம் டோங்­கா­வைச் சென்­ற­டைந்­தன.

அதில் அவ­சி­யத் தேவை­யான தண்­ணீர், தங்­கு முகாம் பொருள்கள், தக­வல் தொடர்பு சாத­னங்­கள், மின் உற்­பத்தி ஜென­ரேட்­டர்­கள் போன்­றவை கொண்டு செல்­லப்­பட்­டன.

இதை­ய­டுத்து, 250,000 லிட்­டர் தண்­ணீ­ரு­டன் நியூ­சி­லாந்து கடற்­படைக் கப்­பல் ஒன்று நேற்று டோங்கா சென்­ற­டை­ய­வி­ருந்­தது.

மேலும் அக்­கப்­பல் உப்­பு­நீ­ரைக் குடி­நீ­ராக்­கும் ஆலை மூலம் நாளொன்­றுக்கு 70,000 லிட்­டர் தண்­ணீ­ரைச் சுத்­தி­க­ரிக்­கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த வாரத்­தில் மேலும் பல நிவா­ர­ணப் பொருட்­க­ளு­டன் ஆஸ்­தி­ரே­லிய கப்­பல் டோங்கா சென்­ற­டை­யும் என்று டோங்­கா­வில் உள்ள ஆஸ்­தி­ரே­லிய தூத­ர­கம் தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே, வியா­ழக்­கி­ழ­மை­யன்று நிவா­ர­ணப் பொருட்­க­ளைக் கொண்டு சென்ற ஆஸ்­தி­ரே­லிய விமா­னத்­தில் இருந்த ஒரு­வ­ருக்குக் கிரு­மித்­தொற்று இருப்­பது தெரிய வந்­த­தை­ய­டுத்து, அது மீண்­டும் ஆஸ்திரேலியாவிற்கே திருப்பப் பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!