ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வின் ஜோகூர் பாரு சட்­ட­மன்­றம் நேற்று கலைக்­கப்­பட்­டது.

இது­தொ­டர்­பாக நேற்று மாலை 5.00 மணி­ய­ள­வில் ஜோகூர் முதல்­வர் ஹஸ்னி முக­மது, மாநில மன்னர் சுல்­தான் இப்­ரா­கிம் சுல்­தான் இஸ்­கந்தரை அவர்­க­ளைச் சந்­தித்தார்.

அந்­தச் சந்­திப்­பின்­போது ஜோகூர் மாநில சட்­ட­மன்­றத்­தைக் கலைப்­ப­தற்கு சுல்­தான் அனு­மதி அளித்­தார்.

இதை­ய­டுத்து, இன்­னும் 60 நாள்­களில் அம்­மா­நி­லத்­திற்­கான சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெ­றும்.

சென்ற மாதம் ஜோகூர் மாநில சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் மாண்­டு­விட்­டார். இதை­ய­டுத்து, 56 இடங்­க­ளைக் கொண்ட சட்­ட­மன்­றத்­தில் முதல்­வர் ஹஸ்­னிக்கு எதிர்க்­கட்­சி­யை­விட ஒரே­யொரு உறுப்­பி­ன­ரின் (28 உறுப்­பி­னர்­கள்) ஆதரவு மட்­டுமே கூடு­த­லாக உள்­ளது.

நாடு முழு­வ­தும் சரா­ச­ரி­யாக தின­சரி 3,000க்கும் அதி­க­மா­ன­வர்­கள் தொற்­றுக்கு ஆளா­கும் நிலை இருந்­தா­லும், உறு­தி­யற்ற பெரும்­பான்மை, சுல்­தான் இப்­ரா­ஹிமை சட்­ட­மன்றக் கலைப்­புக்கு ஒப்­புக்­கொள்ள வைத்­த­தாக அம்னோ அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

நவம்­பர் 20ஆம் தேதி நடை­பெற்ற மலாக்கா தேர்­த­லில், அம்னோ கட்சி பெற்ற அமோக வெற்­றிக்­குப் பிறகு, ஜோகூ­ரி­லும் இன்­னோர் தேர்­தலை எதிர்­கொள்ள ஆர்­வ­மாக உள்­ளது.

இத்­தேர்­தல் மூலம் அம்னோ தலை­மை­யி­லான பாரி­சான் நேச­னல் கூட்­ட­ணிக்கு கிடைக்­கும் மற்­றொரு பெரிய வெற்றி என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அந்த வெற்றி, மத்­தி­யில் ஆளும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பெர்சத்து கட்சியிடம் தனது பலத்தைக் காண்­பித்து, அதன் தலை­வர் முகை­தீன் யாசி­னுக்குத் தர்­ம­சங்­கடத்தை ஏற்படுத்தக்கூடும்.

அத்­து­டன் 2018ஆம் ஆண்டு பொதுத்­தேர்­த­லில் அம்னோ அடைந்த அதிர்ச்­சித் தோல்­விக்­குப் பிறகு, கைந­ழு­விப் போன அதி­கா­ரத்தை மீட்­டெ­டுக்­கும் நம்­பிக்­கை­யோடு பொதுத் தேர்­தலை எதிர்­கொள்ள ஊக்­க­ம­ளிக்­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கு முந்தைய இத்தேர்தல் மாநிலக் கட்சிகளின் பலத்தைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!