வடகொரியாவில் முதல் கொவிட்-19 மரணம்

பியோங்யாங்: வட­கொ­ரி­யா­வில் கொவிட்-19 தொற்­றால் குறைந்­தது ஒரு­வர் இறந்­து­விட்­ட­தா­க­வும் பல்லா­யி­ரக்­கணக்­கா­னோ­ரி­டம் காய்ச்சல் அறி­கு­றி­கள் தென்­பட்­டுள்­ள­தா­க­வும் அர­சாங்க ஊட­கம் நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19 பெருந்­தொற்று தொடங்­கி­ய­தி­லி­ருந்து உல­கெங்­கும் பல நாடு­கள் தொற்றை எதிர்த்துப் போராடி வந்த நிலை­யில், அந்­தப் பாதிப்­பி­லி­ருந்து தப்பித்து வந்த வெகு சில நாடு­களில் வட­கொ­ரி­யா­வும் ஒன்று. ஆனால், பல நாடு­களும் தொற்­றுச் சூழ­லி­ல் இ­ருந்து மீண்­டு வரும் வேளை­யில், வட­கொ­ரியா அதை எதிர்­கொண்டு வரு­கிறது.

தென்­கொ­ரி­யா­வின் புதிய அதி­ப­ரான யூன் சுக் யோல், வட­கொ­ரி­யர்­க­ளுக்கு கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளை­யும் இதர மருத்துவ உத­வி­க­ளை­யும் வழங்­கத் திட்­ட­மிட்­டுள்­ளார். இது­கு­றித்து வட­கொ­ரி­யா­வு­டன் தமது அர­சாங்­கம் கலந்­தா­லோ­சிக்­கும் என்று அவ­ரு­டைய பேச்­சா­ளர் நேற்று கூறி­னார்.

வட­கொ­ரி­யா­வில் கொவிட்-19 பரி­சோ­தனை ஆற்­றல் குறை­வாக இருப்­ப­தால், இது­வரை வெளி­யிடப்­பட்­டுள்ள தொற்­று பாதிப்பு எண்­ணிக்கை, உண்­மை­யான பாதிப்­பில் ஒரு சிறிய அள­வா­கவே இருக்­கும் என நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

கொவிட்-19 தடுப்­பூ­சித் திட்­டம் இல்­லாத உல­கின் இரு நாடு­களில் ஒன்­றான வட­கொ­ரி­யா­வில் தொற்று கார­ண­மாக ஆயி­ரக்­கணக்­கா­னோர் உயி­ரி­ழக்­கும் சாத்­தி­யம் இருப்­ப­தா­க­வும் நிபு­ணர்­கள் சொல்­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!