உக்ரேனுக்கு 20 நாடுகள் ஆயுத உதவி

வா‌ஷிங்டன்: ர‌ஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட உக்ரேனுக்கு 20 நாடுகள் ஆயுத உதவி வழங்க முன்வந்துள்ளதாக நட்பு நாடுகளுடனான சந்திப்பிற்குப் பிறகு அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் சொன்னார்.

இரண்டாவது முறையாக நடைபெற்ற இச்சந்திப்பில், உக்ரேனுக்கு உதவுவது பற்றி விவாதிக்க, கிட்டத்தட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இணையம் வழி இணைந்தன. அப்போது உக்ரேனுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள், பிற பொருள்களை அளிப்பதாக 20 நாடுகள் உறுதி அளித்தன.

உக்ரேனுக்கு ஹார்பூன் எனும் கப்பல்களைக் குறிவைத்து தாக்கும் ஏவுகணைகளை அனுப்ப டென்மார்க் உறுதியளித்ததாகவும் செக் குடியரசு தாக்குதல் ஹெலிகாப்டர்கள், டாங்கிகள், ஏவுகணை அமைப்புகளை வழங்கவுள்ளதாகவும் திரு ஆஸ்டின் கூறினார். டென்மார்க் உக்ரேனின் கருங்கடல் துறைமுகமான ஒடெசாவிற்குப் பாதுகாப்பளிக்கும் என்று கூறியுள்ளது.

இதற்கிடையே, உக்ரேனின் கிழக்கில் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளில் ர‌ஷ்யா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரேனின் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா, “ர‌ஷ்ய ராணுவம் மிகவும் இரக்கமற்ற முறையில் டோன்பாஸ் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் இல்லை. நட்பு நாடுகள் எங்களுக்கு ஆயுத விநியோகத்தை விரைவுபடுத்த வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உக்ரேன்மீது ர‌ஷ்யா தொடுத்து வரும் தாக்குதலுக்குக் கண்டிப்பாக பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வோன் டெர் லேயேன்.

இந்தப் போரில் உக்ரேன் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்றும் அதற்குத் தேவையான அனைத்தையும் ஐரோப்பிய ஆணையம் செய்யும் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவில் உள்ள தனது அனைத்து 130 உணவகங்களையும் மூடப்போவதாக ஸ்டார்பக்ஸ் தெரிவித்துள்ளது.

படையெடுப்பு காரணமாக அந்நிறுவனம் ரஷ்யாவில் இயங்குவதைக் கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக நிறுத்தியது.

இப்போது ரஷ்யாவில் இயங்குவதை நிரந்தரமாக நிறுத்தப்போவதாக அமெரிக்க நிறுவனமான ஸ்டார்பக்ஸ் அறிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!