பின்வாங்கும் உக்ரேனியப் படைகள்

பின்வாங்கும் உக்ரேனியப் படைகள்

1 mins read
b47567ec-57cb-42c8-b1d6-c95becac7f62
-

கியவ்: பல வாரங்­கள் நீடித்த கடு­மை­யான சண்­டைக்­குப் பிறகு முக்­கி­யப் போர்க்­க­ள­மா­கக் கரு­தப்­படும் 'சிவி­ய­ரோ­டோ­னெட்ஸ்க்' நக­ரி­லி­ருந்து உக்­ரே­னி­யப் படை­களை மீட்­டுக்­கொள்ள உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

உக்­ரே­னிய வீரர்­கள் போரில் உயிர்­நீப்­ப­தைக் குறைப்­ப­தும் படைக்­கு­ழுக்­களை வேறு இடங்­க­ளுக்கு மாற்றி அனுப்­பு­வ­தும் இந்த நட­வ­டிக்­கை­யின் நோக்­கம்.

வெடி­குண்­டுத் தாக்­கு­த­லால் உருக்­கு­லைந்து கிடக்­கிறது 'சிவி­ய­ரோ­டோ­னெட்ஸ்க்'. முன்­னர் இங்கு நூற்­றுக்­கணக்­கான பொது­மக்­கள் ரசா­யன ஆலை ஒன்­றில் சிக்­கி­யி­ருந்­த­னர். இனி இங்கு மீட்­ப­தற்கு அதி­கம் ஏது­மில்லை என்­கிறது உக்ரேன்.

இருப்­பி­னும் உக்­ரே­னி­யப் படை­யி­னர் மீட்­டுக்­கொள்­ளப்­படு­வதை ரஷ்யா தனக்­குக் கிடைத்த குறிப்­பி­டத்­த­குந்த வெற்­றி­யா­கக் கரு­தக்­கூ­டும் என்­று கவ­னிப்­பா­ளர்­கள் கூறுகின்றனர்.