கட்டாய முகக்கவச விதியைத் தளர்த்திய நாடுகள்

கடந்த ஈராண்­டு­க­ளுக்­கும் மேலாக கொவிட்-19 கிரு­மிப் பர­வல் உலகை ஆட்­டிப்­ப­டைத்த நிலை­யில், அதன் பிடி­யி­லி­ருந்து தப்­பிக்க பல நாடு­களும் தங்­கள் மக்­க­ளுக்­குத் தடுப்­பூ­சி­க­ளை­யும் கூடு­தல் தடுப்­பூ­சி­களை­யும் போட்­டுள்­ளன.

இத­னை­ய­டுத்து, பல நாடு­களும் கொவிட்-19 பர­வ­லைத் தடுக்­கும் நோக்­கில் விதிக்­கப்­பட்­டி­ருந்த கட்­டுப்­பா­டு­களை அகற்றி வரு­கின்­றன. ஆனா­லும், முகக்­க­வ­சம் அணி­யும் நடை­முறை தொடர்­கிறது. இந்­த நி­லை­யில், ஆசிய நாடு­களில் எத்­த­கைய முகக்­க­வச விதி­மு­றை­கள் நடப்­பி­லுள்­ளன என்­ப­தைப் பார்க்­க­லாம்.

சீனா: பொதுப் போக்­கு­வ­ரத்து, கடைத்­தொ­கு­தி­கள், உடற்­ப­யிற்­சிக்­கூ­டங்­கள் உள்­ளிட்ட பொது இடங்­களில் கட்­டா­யம் முகக்­க­வ­சம் அணிய வேண்­டும்.

இந்­தியா: பல மாநி­லங்­க­ளி­லும் சந்­தை­கள், மருத்­து­வ­ம­னை­கள் போன்ற இடங்­க­ளி­லும் பொதுப் போக்­கு­வ­ரத்­தில் பய­ணம் செய்­யும்­போது முகக்­க­வ­சம் அணிந்­தி­ருப்­பது கட்­டா­யம். ஆனா­லும், கடந்த மாதத்­தில் இருந்­த­தைப்­போல அதி­கா­ரி­கள் இப்­போது இவ்­வி­தி­யைக் கண்டிப்பாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதோ, அப­ரா­தம் விதிப்­பதோ இல்லை.

இந்­தோ­னீ­சியா: கொவிட்-19 பர­வல் மீண்­டும் அதி­க­ரித்­ததை அடுத்து, ஜூலை 1 முதல் கட்­டா­ய­மாக முகக்­க­வ­சம் அணி­வது மீண்­டும் நடப்­பிற்கு வந்­துள்­ளது.

ஜப்­பான்: பொதுப் போக்­கு­வரத்து போன்ற கூட்­ட­மான இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம். வெளிப்­பு­றங்­களில் அதனை அகற்­றிக்­கொள்­ள­லாம்.

மலே­சியா: உட்­பு­றங்­களில் கட்­டா­ய­மாக முகக்­க­வ­சம் அணிய வேண்­டும்; வெளிப்­பு­றங்­களில் அவ­ர­வ­ரது விருப்­பம்.

தென்­கொ­ரியா: உட்­பு­றங்­க­ளி­லும் பொதுப் போக்­கு­வ­ரத்­தி­லும் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­யம். வெளிப்­பு­றங்­களில் அவ­சி­ய­மில்லை என்­ற­போ­தும் அவ்­வ­ழக்­கம் நீடிக்­கிறது.

தைவான்: வீட்­டை­விட்டு வெளி­யில் வந்­தாலே முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும். ஆயி­னும், உடற்­ப­யிற்­சி­யின்­போது அல்­லது வெளிப்­புற நட­வ­டிக்­கை­க­ளின்­போது அதனை அகற்­றிக்­கொள்­ள­லாம். வெளிப்­பு­றங்­களில் சமூக இடை­வெ­ளி­விட்டு வேலை செய்­தால் முகக்­க­வ­சம் கட்­டா­ய­மன்று.

தாய்­லாந்து: கடந்த ஜூன் மாதத்­தி­லி­ருந்து உட்­பு­றங்­க­ளி­லும் வெளிப்­பு­றங்­க­ளி­லும் கட்­டாய முகக்­க­வச நடை­முறை அகற்­றப்­பட்­டு­விட்­டது. ஆனா­லும், கூட்­ட­மான அல்­லது சமூக இடை­வெ­ளிக்கு வாய்ப்­பில்­லாத அல்­லது காற்­றோட்­டம் குறை­வான இடங்­களில் முகக்­க­வ­சம் அணி­யும்­படி அதி­கா­ரி­கள் அறி­வுறுத்­து­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!