கிருமி செய்திகள்

குரங்கம்மை தடுப்பூசிக்காக

கனடாவில் குவியும் அமெரிக்கர்கள்

மொன்ட்ரியால்: அமெரிக்காவில் போதுமான குரங்கம்மை தடுப்பூசிகள் இல்லாததால் அமெரிக்கர்கள் உட்பட ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் கனடாவிற்குச் செல்கின்றனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் கனடாவின் மொன்ட்ரியால் நகருக்குப் படையெடுக்கின்றனர்.

குபெக் மாநிலத்தில் உள்ள கனடாவின் இரண்டாவது ஆகப் பெரிய நகரான மொன்ட்ரியால், அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் இருக்கும் எல்லைக்கு சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தங்களுக்கு குரங்கம்மை தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளது என்று அஞ்சுபவர்கள் அனைவருக்கும் மொன்ட்ரியால் தடுப்பூசியை வழங்குகிறது.

குரங்கம்மைக்குப் புதிய பெயர்; மக்களின் ஆலோசனை தேவை

நியூயார்க்: குரங்கம்மைக்குப் புதிய யெர் சூட்ட உலக சுகாதார நிறுவனம் பொதுமக்களின் ஆலோசனையைக் கேட்கிறது. தற்போதைய பெயரால் குரங்கம்மைத் தொற்றைப் பற்றித் தவறான கருத்துகள் நிலவாமல் இருக்க எடுக்கப்படும் முயற்சிகளில் இது ஒன்று.

குரங்கம்மைக்குப் புதிய பெயர் சூட்ட விரும்பும் யாவரும் கருத்துகளை முன்வைக்கலாம் என்று அறிக்கை ஒன்றில் உலக சுகாதார நிறுவனம் கூறியது. இணையம் வாயிலாக மக்கள் தங்களின் கருத்துகளைத் தெரியப்படுத்தலாம் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

நியூயார்க் கழிவுநீரில் இளம்பிள்ளைவாத கிருமி

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கழிவுநீரில் இளம்பிள்ளைவாத கிருமி கண்டறியப்பட்டுள்ளதாக அந்நகரின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கடி பரவிய இளம்பிள்ளைவாதம் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டது. ஆனால் அண்மைக் காலமாக சில நாடுகளில் அது மீண்டும் கண்டறியப்பட்ட பிறகு பிறகு பல காலத்திற்குப் பிறகு பெற்றோர் மீண்டும் கவலைக்குள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்திலிருந்தே அமெரிக்காவின் கழிவு நீரில் இளம்பிள்ளைவாத கிருமி இருந்து வந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். கிருமித்தொற்றுக்கு ஆளாகாமல் இருக்க அதற்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு அவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!