இங்கிலிஷ் பிரிமியர் லீக்

யுனைடெட்டிற்குத் தொடர் அவமானம்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் எதிர்பாரா வகையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை 4-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தியுள்ளது பிரென்ட்ஃபர்ட் (படம்). இப்பருவத்தில் தனது முதல் இரு ஆட்டங்களிலும் யுனைடெட் தோல்வியடைந்துள்ளது.

அனைத்து கோல்களும் முற்பாதியாட்டத்தில் விழுந்தன. யுனைடெட் சரியாக விளையாட முடியாதபடி நெருக்குதல் அளித்து மிகச் சிறப்பாக ஆடியது பிரென்ட்ஃபர்ட்.

புதிய நிர்வாகி எரிக் டென் ஹாக்கின் தலைமையிலும் யுனைடெட் தொடர்ந்து அவமானத்தைச் சந்தித்து வருகிறது. அடுத்த லீக் ஆட்டத்தில் லிவர்பூலை வெல்லவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது யுனைடெட்.

போர்ன்மத்தை ஊதித்தள்ளிய சிட்டி

மான்செஸ்டர்: பிரிமியர் லீக்கின் நடப்பு வெற்றியாளர் அணியான மான்செஸ்டர் சிட்டி போர்ன்மத்தை 4-0 எனும் கோல் கணக்கில் வென்று தொடர்ந்து தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது.

நிர்வாகி பெப் குவார்டியோலாவின் தலைமையில் கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பாக விளையாடிவரும் சிட்டி லீக்கில் தடுமாறுவதற்கான அறிகுறிகள் ஏதும் தற்போதைக்குத் தென்படவில்லை. சிட்டியின் சில விளையாட்டாளர்கள் மற்ற அணிகளில் உள்ள தலைசிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களையும் சாதாரணமாகத் தென்பட வைக்கக்கூடியவர்கள்.

சிட்டியின் புதிய நட்சத்திரம் எர்லிங் ஹாலண்ட் போர்ன்மத்துடனான ஆட்டத்தில் கோல் போடாவிட்டாலும் பலரையும் கவரும் வண்ணம் விளையாடினார்.

மிரட்டலடி தந்த ஆர்சனல்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விறுவிறுப்பாக விளையாடி லெஸ்டர் சிட்டியை 4-2 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது ஆர்சனல். அதிலும் நான்கில் இரண்டு கோல்களைப் போட்ட முன்னாள் மான்செஸ்டர் சிட்டி வீரர் கேப்ரியல் ஜெசுஸ் அபாரமாக ஆடினார்.

சுமார் 18 ஆண்டுகளாக எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்யாத ஆர்சனல் இப்பருவத்தில் புத்துயிர் பெற்று சிறப்பாக ஆடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. பருவம் முழுவதற்கும் இவ்வாறே தன்னம்பிக்கையுடன் ஆடுவதே முக்கியம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!