எகிப்து தேவாலயத்தில் தீ; குறைந்தது 41 பேர் மரணம்

எகிப்து தேவாலயத்தில் தீ; குறைந்தது 41 பேர் மரணம்

1 mins read
ea73d23b-41b0-42b3-9dc8-9493e5e06fd7
கிஸா நகரில் உள்ள தேவாலயத்தில் தீ மூண்டது. படம்: ராய்ட்டர்ஸ் -

கெய்ரோ: எகிப்­தில் உள்ள தேவா­ல­யம் ஒன்­றில் தீ மூண்­ட­தால் குறைந்­தது 41 பேர் மர­ண­ம­டைந்­த­னர். கிஸா நக­ரில் உள்ள அபு சிஃபின் தேவா­ல­யத்­தில் நிகழ்ந்த இச்­சம்பவத்­தில் 45 பேர் காய­ம­டைந்­த­னர்.

சிங்­கப்­பூர் நேரப்­படி பிற்­ப­கல் மூன்று மணி­ய­ள­வில் மின்­சா­ரம் தொடர்­பி­லான கார­ணங்­க­ளால் தேவா­ல­யத்­தில் தீ மூண்­டது. இம்­பாபா எனும் குடி­யி­ருப்­புப் பகு­தி­யில் உள்ள இந்த தேவா­ல­யத்­தில் பிரார்த்­த­னைக்­காக சுமார் 5,000 பேர் திரண்­டி­ருந்­த­தாக தக­வல்­கள் கூறின.

தேவா­ல­யத்­தின் ஒரு நுழை­வா­யில் தீயால் அடைக்­கப்­பட்­டது. அத­னால் பலர் மிதி­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. மாண்­டோ­ரில் பெரும்­பா­லோர் சிறு­வர்­கள் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இது­போன்ற மின்­சா­ரம் சம்­பந்­தப்­பட்ட கார­ணங்­க­ளால் தீ மூள்­வது எகிப்­தில் அடிக்­கடி நிக­ழக்கூடிய ஒன்று. 2020ஆம் ஆண்­டின் இறு­தி­யில் நிகழ்ந்த இத்­த­கைய சம்­பவத்­தில் குறைந்­தது எழு­வர் மாண்­ட­னர், மேலும் பலர் காய­ம­டைந்­த­னர்.

எகிப்­தின் இரண்­டா­வது ஆகப் பெரிய நக­ரான கிஸா, நைல் ஆற்றுக்கு அருகே தலைநகர் கெய்ரோவிற்கு எதிரே உள்ளது.