தைவான் அருகில் சீனா கூடுதல் போர்ப் பயிற்சி

பெய்­ஜிங்: அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சிலர்

தைவா­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டதை அடுத்து, அத்­

தீ­வுக்கு அரு­கில் சீனா கூடு­தல் போர்ப் பயிற்­சி­களை நடத்தி தனது அதி­ருப்­தியை வெளிப்

படுத்­தி­யது.

சென­டர் எட் மார்கி தலை­மை­யின்­கீழ் ஐந்து அமெ­ரிக்க

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தைவா­னிய நேரப்­படி நேற்று

முன்­தி­ன இரவு அந்­நாட்­டின் தலை­ந­கர் தைப்­பே­யைச்

சென்­ற­டைந்­த­னர்.

அவர்­க­ளது பய­ணம் குறித்து அதற்கு முன் எவ்­வித தக­வ­லும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இம்­மா­தத் தொடக்­கத்­தில் அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற நாய­கர் நேன்சி பெலோ­சி­யின் தைவான் பய­ணம் சீனா­வைக் கோபப்­ப­டுத்­தி­யது.

திரு­வாட்டி பெலோ­சி­யின் தைவான் பய­ணத்­தைக் கண்­டித்து அது தைவா­னிய கடற்­ப­குதி அரு­கில் போர்ப் பயிற்­சி­களை

நடத்­தி­யது.

இந்­நி­லை­யில், அமெ­ரிக்க நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் தைவா­னுக்­குச் சென்­றுள்­ள­தால் தைவா­னைச் சுற்­றி­யுள்ள கடற்­

ப­கு­தி­யி­லும் வான்­வெ­ளி­யி­லும் சீனா­வுக்­குச் சொந்­த­மான போர்க்­கப்­பல்­கள், போர் விமா­னங்­கள் நேற்று போர்ப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டன.

"தைவா­னிய நீரி­ணை­யில் நில­வும் அமை­தியை சீர்­கு­லைக்க அமெரிக்கா, தைவான் ஆகிய நாடுகளால் ­மேற்கொள்­ளப்­படும்

முயற்­சி­க­ளுக்கு இந்­தப் போர்ப் பயிற்­சி­கள் மூலம் எச்­ச­ரிக்கை விடுக்­கி­றோம்," என்று சீன

ரா­ணு­வத்­தின் கிழக்­குப் பகுதி பிரிவு அறிக்கை வெளி­யிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!