பள்ளிகளில் கைப்பேசிகளை தடை செய்ய அழைப்பு

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் மக்­கள்­தொகை ஆக அதி­கம் உள்ள மாநி­ல­மான நியூ சவுத் வேல்­ஸில் பள்­ளி­களில் கைப்பே­சி­க­ளைத் தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அம்­மா­நி­லத்­தில் உள்ள தொடக்­கப்­பள்­ளி­களில் பயி­லும் ஏறத்­தாழ 12 வயது மாண­வர்­கள் பள்­ளி­யில் இருக்­கும்­போது கைப்பே­சி­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­யாது எனச் சில பள்­ளி­கள் அறி­வித்­தன. கைப்பேசி பயன்­பாட்­டைச் சில பள்­ளி­கள்

கட்­டுப்­ப­டுத்­தின.

இந்த அணு­கு­முறை பல­ன்

தந்­தி­ருப்­ப­தாக அப்­பள்­ளி­கள் தெரி­வித்­தன. மாண­வர்­கள் கல்­வி­யில் கவ­னம் செலுத்­து­வ­தா­க­வும் தேர்வு முடி­வு­கள் மேம்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

அது­மட்­டு­மல்­லாது, ஆசி­ரி­யர்

களுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் இடை­யி­லான தொடர்பு வலு­வ­டைந்­தி­ருப்­ப­தாக நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதி­கா­ரி­கள் கூறி­னர்.

இத­னால் இந்த அணு­கு­

மு­றையை அனைத்து மாண­வர்­

க­ளுக்­கும் விரி­வாக்­கம் செய்ய வேண்­டும் என்று பலர் குரல்

எழுப்­பி­யுள்­ள­னர். சிட்­னி­யில் உள்ள டேவிட்­சன் உயர்­நி­லைப்­பள்ளி 12 வய­தி­லி­ருந்து 16 வயது வரை­யி­லான மாணவர்களுக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் கைப்பேசிக்கு தடை விதித்தது.

அதன்­படி, மாண­வர்­கள் தங்­கள் கைப்பே­சி­க­ளைப் பள்­ளிக்­குக் கொண்டு செல்­ல­லாம். ஆனால் அவற்றை தங்­க­ளுக்­கென ஒதுக்­கப்­பட்ட பாது­காப்புப் பெட்­டி­களில் பூட்டி வைத்­தி­விட வேண்­டும்.

கைப்பே­சித் தடை கார­ண­மாக மாண­வர்­க­ளி­டை­யி­லான தொடர்பு, பேச்சு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக பள்­ளி­யின் தலை­மை­யா­சி­ரி­யர் திரு டேவிட் ரூல் மகிழ்ச்சி தெரி­வித்­தார்.

"கவ­னச் சித­ற­லைக் குறைக்­கும் அணு­கு­மு­றை­கள் பள்ளி ஊழி­யர்­க­ளுக்­கும் மாண­வர்­க­ளுக்­கும் பல­னைத் தரு­கின்­றன. கைப்பேசி இல்­லா­த­தால் பிற­ரு­டன் பேசும் பழக்­கம் அதி­க­ரித்­துள்­ளது. மேலும் மாண­வர்­கள் பலர் விளை­­யாட்­டு­களில் ஈடு­ப­டு­கின்­ற­னர். இத­னால் மகிழ்ச்சி அடைகிறோம்," என்று திரு ரூல் கூறி­னார். பள்ளிகளில் கைப்பேசித் தடைக்குப் பெற் றோரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!