ஈரானில் நாளுக்கு நாள் வலுவடையும் அதிருப்தி, எதிர்ப்பு, கொந்தளிப்பு

ஈரானில் நாளுக்கு நாள் வலுவடையும் அதிருப்தி, எதிர்ப்பு, கொந்தளிப்பு

2 mins read
86f98031-bb74-44e0-8bb8-670642b4fab2
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த மாஹ்சா அமினியின் மரணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

தெஹ்­ரான்: 'ஹிஜாப்' எனும் தலை­யங்­கியை அணி­யா­த­தற்­காக

ஈரா­னிய அற­நெ­றிப் பிரிவு அதி­காரிக­ளால் தடுத்து வைக்­கப்­பட்ட இளம் பெண் ஒரு­வர் மர­ண­ம­டைந்­ததை அடுத்து, அந்­நாட்­டில் மட்­டு­மல்­லாது உல­கெங்­கும் பல நாடு­களில் எதிர்ப்­புக் குரல்­கள் நாளுக்கு நாள் வலு­வ­டைந்து வரு­கின்­றன.

22 வயது மாஹ்சா அமினி தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­த­போது கோமா நிலைக்­குச் சென்­றார். பிறகு சிகிச்சை பல­னின்றி மாண்­டார்.

அவ­ரது மர­ணத்­துக்­கான கார­ணத்­தைக் கண்­ட­றிய விசா­ரணை நடத்­தப்­படும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மாஹ்சா அமி­னி­யின் மர­ணம் ஈரா­னி­யர்­க­ளின் மத்­தி­யில் கொந்­

த­ளிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

2019ஆம் ஆண்­டுக்­குப் பிறகு ஈரா­னில் தற்­போது மிகக் கடு­மை­யான ஆர்ப்­பாட்­டங்­களில் அந்­நாட்டு மக்­கள் இறங்­கி­யுள்­ள­னர்.

குர்­தி­யர்­கள் அதி­கம் இருக்­கும் பகு­தி­களில் ஆர்ப்­பாட்­டங்­கள் முத­லில் நடத்­தப்­பட்­டன. அதன் பிறகு ஈரா­னெங்­கும் குறைந்­தது 50 நக­ரங்­க­ளுக்கு ஆர்ப்­பாட்­டங்­கள் பரவி இருக்­கின்­றன.

ஆர்ப்­பாட்­டாக்­கா­ரர்­க­ளைக் கலைக்க ஈரா­னி­யக் காவல்­து­றை­யி­னர் மூர்க்­கத்­த­ன­மான அணு­கு­மு­றை­க­ளைக் கடைப்­பி­டிப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

"நாங்­கள் இறந்­தா­லும் ஈரானை மீட்­டெ­டுப்­போம்," என்று ஈரா­னின் வட­கி­ழக்­குப் பகு­தி­யில் நேற்று நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் இருந்த காவல் நிலையத்துக்குத் தீவைக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

ஈரா­னின் ஆன்­மி­கத் தலை­

வ­ருக்கு எதி­ரா­க­வும் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் முழக்­க­மிட்­ட­னர்.

இதற்­கி­டையே, நேற்று முன்­

தி­னம் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை நோக்கி ஈரா­னி­யப் பாது­காப்­புப் படை­ துப்­பாக்­கி­யால் சுட்­ட­தா­க­வும் மூவர் மாண்­ட­தா­க­வும் குர்­திய

உரி­மைக் குழு தெரி­வித்­தது.

இதன்­மூ­லம், மாண்ட ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இது­வரை 10 பேர் மாண்டு ­விட்­ட­தாக நம்­பப்­ப­டு­கிறது.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைப் பாது­காப்­புப் படை­யி­னர் சுட்­டுக் கொல்­ல­வில்லை என்­றும் அவர்­கள் அர­சாங்க எதிர்ப்­பா­ளர்­க­ளால் கொல்­லப்­பட்­டி­ருக்­கக்­கூ­டும் என்­றும் அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், ஆர்ப்­பாட்­டங்­களின் தீவி­ரம் குறை­யா­மல் இருப்­ப­தால் இணை­யச் சேவையை அதி­கா­ரி­கள் முடக்கியி­ருப்­ப­தாக அறி­யப்­ப­டு­கிறது.