நவம்பர் 14ல் நஜிப், ரோஸ்மா ஆடம்பரப் பொருள்கள் தொடர்பில் முடிவு

நவம்பர் 14ல் நஜிப், ரோஸ்மா ஆடம்பரப் பொருள்கள் தொடர்பில் முடிவு

1 mins read
caaec5af-6450-4b1d-9c2e-0cc2f41fa9c0
-

கோலா­லம்­பூர்: முன்­னாள் மலே­சிய பிர­த­மர் நஜிப் ரசாக், அவ­ரின் மனைவி ரோஸ்மா மன்­சூர் ஆகி­யோ­ரின் ஆடம்­ப­ரப் பொருள்­களை அவர்­க­ளி­டம் திரும்­பித் தரு­வது குறித்து வரும் நவம்­பர் மாதம் 14ஆம் தேதி­யன்று உயர்­நீ­தி­மன்­றம் முடி­வெ­டுக்­கும். நகை­கள், விலை­யு­யர்ந்த கைக்­க­டி­கா­ரங்­கள், கைப்­பை­கள் ஆகி­யவை பறி­மு­த­லான பொருள்­களில் அடங்­கும்.

1எம்­டிபி விவ­கா­ரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­யின்­போது அதி­கா­ரி­கள் அந்­தப் பொருள்­களை 'பெவி­லி­யன் ரெசி­டன்­சஸ்' உயர்­தர கூட்­டு­ரிமை வீட்­டி­லி­ருந்து பறி­மு­தல் செய்­த­னர். 2018ஆம் ஆண்டு சோத­னை­கள் நடத்­தப்­பட்­ட­போது அந்­தப் பொருள்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.