ஈரான் ஆர்ப்பாட்டங்கள்: ஒரே மாநிலத்தில் 450 பேர் கைது

ஈரான் ஆர்ப்பாட்டங்கள்: ஒரே மாநிலத்தில் 450 பேர் கைது

1 mins read
a0ccd42c-2195-49c9-9386-0e90d115d9cb
-

டெஹ்­ரான்: சர்ச்­சைக்­குரிய 22 வயது குர்­தியப் பெண்­ணின் மர­ணத்­தை­ய­டுத்து ஈரா­னில் தொடர்ந்து ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெற்று வருகின்றன. வட ஈரா­ன் மாநி­லம் ஒன்றில் மட்­டும் 450 பேர் கைது செய்­யப்­பட்­ட­தாக ஈரான் அர­சாங்க ஊட­கம் நேற்று தெரி­வித்­தது.

ஆர்ப்­பாட்­டக்­காரர்­க­ளைத் தடுக்க மேற்­கொள்ளப்­படும் வன்­முறை கலந்த நட­வடிக்­கை­களை நிறுத்­து­மாறு ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தின் முக்­கிய வெளி­நாட்­டுத் தூத­ரான ஜோசெப் போரெல் ஈரா­னி­டம் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­யுள்­ளார். ஈரா­னின் பல நக­ரங்­களில் ஆர்ப்­பாட்­டங்­கள் தொடர்கின்றன.

மற்ற நாடுகளிலும் ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெற்­றன. இங்­கி­லாந்து தலை­ந­கர் லண்­டன், பிரான்ஸ் தலை­ந­கர் பாரிஸ் ஆகி­ய­வற்­றில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­கள் காவல்­து­றை­யி­ன­ரு­டன் மோதி­னர்.