‘உறுதியான முடிவுகளை ஜி20 வழங்கும்’

இர்­ஷாத் முஹம்­மது

உல­க­ளா­வியப் பொரு­ளி­யல் மீட்­சிக்­கான உறு­தி­யான முடி­வு­களை ஜி20 வழங்­கும் என்று எதிர்­பார்ப்­ப­தாக இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோடோ கூறி­யுள்­ளார்.

உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்­து­கொள்­வ­தற்­காக வருகை புரிந்­துள்ள அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைட­னு­டன் நடத்­திய இரு­த­ரப்பு சந்­திப்­பின் தொடக்­கத்­தில்

திரு விடோடோ அத­னைத் தெரி­வித்­தார்.

"உல­கின் பொரு­ளி­யல் மீட்­சிக்கு உத­வும் உறு­தி­யான பங்­கா­ளித்­து­வத்தை ஜி20 உச்­ச­நிலை மாநாட்டு வழங்­கும் என்று நம்­பு­வோம்," என்­றார் அவர். அமெ­ரிக்­கா­வுக்­கும் இந்­தோ­னீ­சி­யா­விற்­கும் இடை­யி­லான உத்­தி­பூர்வ பங்­கா­ளித்­து­வத்­தின் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்றி அதி­பர் பைடன் பேசி­ய­தா­க­வும் அதை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­கள் குறித்து இரு தலை­வர்­கள் பேசி­ய­தா­க­வும் வெள்ளை மாளிகை வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. வெற்­றிக­ர­மான உச்­ச­நிலை சந்­திப்­புக்­கும் ஜி20 தலை­மைக்­கும் திரு விடோ­டோ­விற்கு வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்த திரு பைடன், அடுத்த ஆண்டு ஆசி­யா­னின் தலை­மைப் பொறுப்பை ஏற்­பது குறித்­தும் கருத்­து­ரைத்­தார். இந்தோ பசி­ஃபிக் வட்­டா­ரத்­தில் ஆசி­யா­னின் பங்கு, ஆசி­யா­னுக்­கான அமெ­ரிக்­கா­வின் ஆத­ரவு போன்ற அம்­சங்­களும் அந்த சந்­திப்­பில் பேசப்­பட்­டன.

உல­கின் ஆகப் பெரிய 20 பொரு­ளி­யல்­க­ளைக் கொண்ட அமைப்­பா­னது ஜி20. அர்­ஜண்­டினா, ஆஸ்­தி­ரே­லியா, பிரே­சில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்­மனி, இந்­தியா, இந்­தோ­னீ­சியா, இத்­தாலி, ஜப்­பான், தென்­கொ­ரியா, மெக்­சிகோ, ரஷ்யா, சவூதி அரே­பியா, தென்­னாப்­

பி­ரிக்கா, துருக்கி, பிரிட்­டன், அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளு­டன் ஐரோப்­பிய ஒன்­றி­ய­மும் அந்த 20 உறுப்­பி­ னர்­களில் அடங்­கும்.

சுழற்சி முறை­யில் இவ்­வாண்­டின் ஜி20 அமைப்­பின் தலை­மையை இந்­தோ­னீ­சியா முதன்­மு­றை­யாக ஏற்­றுள்­ளது. உயர்­மட்ட அள­வில் பல மாநா­டு­கள் நடந்து, இவ்­வா­ரம் உல­கத் தலை­வர்­கள் கலந்­து­கொள்­ளும் உச்­ச­நிலை மாநாடு பாலித்­

தீ­வில் நடை­பெ­று­கிறது.

உறுப்­பி­னர் இல்­லாத பட்­சத்­தி­லும் நட்பு நாடாக சிங்­கப்­பூர் அழைக்­கப்­பட்­டுள்­ளது. கம்­போ­டியா, ஃபிஜி, நெதர்­லாந்து, ருவாண்டா, ஆப்­பி­ரிக்க ஒன்­றி­யம், ஸ்பெ­யின், கரீ­பி­யன் சமூ­கம், உக்­ரேன், ஐக்­கிய அரபு சிற்­ற­ரசுகள் ஆகி­ய­வை­யும் அழைக்­கப்­பட்­டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!