‘சுவாசப் பிரச்சினை’: பியோங்யாங்கில் முடக்கநிலை

சோல்: வட­கொ­ரி­யத் தலை­ந­க­ரம் பியோங்யாங்­கில் முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­தப்பட்­டுள்­ள­தாக தென்­கொ­ரிய ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

பியோங்­யாங்­கில் சுவாசப் பிரச்சினையால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை மள­ம­ள­வென அதி­க­ரித்து வரு­வ­தால் இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­

பட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால் நோயின் பெயரை வட­கொ­ரியா வெளி­யி­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­பட்­டது. வட­கொ­ரிய அர­சாங்­கம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் கொவிட்-19 பற்றி எவ்­வித குறிப்­பும் இல்லை.

வரும் ஞாயிற்­றுக்­கி­ழமை வரை மக்­கள் தங்­கள் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

பியோங்­யாங் மக்­கள் ஒவ்­வொரு நாளும் தங்­கள் உடல்­வெப்­ப­நி­லை­யைப் பல­முறை சோதித்து அதி­கா­ரி­க­ளி­டம் சமர்ப்­பிக்க வேண்­டும்.

வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்­ப­தால் பியோங்­யாங் மக்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான பொருள்களை வாங்­கிக் குவித்து வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது. வடகொரியாவின் வேறு பகுதிகளில் இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!