உல‌க‌ம்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மிகப்பெரிய நகரமான ஜகார்த்தாவை அதன் பல்வேறு நகர்ப்புற பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக பெருந்திட்டம் ஒன்று தீட்டப்பட்டு வருகிறது. நாட்டின் தலைநகராக நுசாந்தரா மாறிய பிறகும் ஜகார்த்தாவை மத்திய அரசாங்கம் மற்றும் அண்டை நகரங்களுடன் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பென்சில்வேனியா: நோயாளிகள் பலருக்கு அளவிற்கு அதிகமாக இன்சுலின் போட்டுக் கொன்ற அமெரிக்கத் தாதிக்கு மூன்று ஆயுள் தண்டனையும் அதன்பின் 380 முதல் 760 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்: அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் மே 4ஆம் தேதியன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழா மிச்சிகன் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டது.
பெர்த்: ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கத்தியைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் 16 வயது இளையரைக் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோக்கியோ: சிங்கப்பூர் மற்றும் ஏழு ஆசிய நாடுகளிலிருந்து ஜப்பான் செல்லும் சுற்றுப்பயணிகள் விரைவில் ஒரு புதிய கூட்டுக் கட்டணத் திட்டத்தின்கீழ் தங்கள் உள்ளூர் கியூஆர் குறியீட்டுப் பணப்பைகளைப் பயன்படுத்தி தாங்கள் பொருள், சேவைகளுக்குப் பணம் செலுத்துவது எளிதாகும்.