தமிழ் முரசு எஸ்பிஎச் கல்வி உபகாரச் சம்பளம்

தமிழ்மொழி மீது பற்றும் ஆர்வமும் கொண்ட இரு மொழி ஆற்றல் கொண்டவரா நீங்கள்? புத்தாக்கச் சிந்தனையும் நடப்பு விவகாரம் பற்றிய புதிய பார்வையும் உள்ளவரா? சிங்கப்பூரில் நிறுவப்பட்டு, சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் குரலாகக் கடந்த 84 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவரும் வர லாற்றுச் சிறப்புமிக்க 'தமிழ் முரசு' நாளிதழில் பணியாற்ற ஆர்வம் கொண்டவரா?
வளமான வாழ்க்கைத் தொழிலை தமிழ் முரசு நிறுவனத்துடன் தொடரும் நோக்கத்தில் அதன் தாய் நிறுவனமான சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) சிறப்புமிக்க கல்வி உபகாரச் சம்பளத்தை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக தமிழ் முரசில் பணியாற்றுவதில் ஆர்வம் கொண்ட இளம் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் உடனே இந்தக் கல்வி உபகாரச் சம்பளத்திற்கு விண்ணப் பிக்கலாம்.
செய்தியாளராக பணியாற்ற விரும்புவோரின் திறன்களை வளர்ப்பதற்கு எஸ்பிஎச் உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகிறது. மாறிவரும் உலகச் சூழலில் ஒவ்வொரு துறையும் மாற்றங்களை எதிர்நோக்கி வருகிறது. தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியும் அன்றாட செயல்பாடுகளில் மின்னிலக்க நடைமுறைகள் அதிகம் இடம்பிடித்து வரும் நிலையிலும் ஊடகத் துறையும் பல மேம் பாடுகளையும் மாற்றங்களையும் கண்டுவந்துள்ளது.
அந்த வரிசையில் ஊடகப் பணியில் செய்தி சேகரிப்பதும் எழுதுவதும் மட்டுமின்றி காணொ ளிகள் போன்ற புதிய வடிவில் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இன்றைய செய்தியாளர்கள் ஈடுபடுகிறார்கள். இளங்கலைப் பட்டக்கல்வியைத் தொடங்குவோருக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பல்கலைக்கழக பட்டக்கல்வியில் பாதிவரை முடித்தவர்களுக்கு இந்த உபகாரச் சம்பளத்திற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. சமூக, நாட்டு, உலக நடப்புகளைக் கண்டறிந்து கற்றல் ஆர்வ மிகுதியுடன் இருமொழி ஆற்றலும் கொண்டவர் கள் உடனே விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். வேலைப் பயிற்சிக்கு அழைக்கப்பட்டு அதன் மூலம் உங்களின் தேர்வை உறுதிசெய்து கொள் ளலாம். https://www.sph.com.sg/careers-scholarships/scholarship-opportunities/ எனும் இணையப்பக்க முகவரி மூலமாகவோ scholars@sph.com.sg எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியோ பதிவு செய்துகொள்ளலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!