தொழில் சூடுபிடிக்க மின்னிலக்கத் தீர்வுகள்

வங்­கி­யில் சில ஆண்­டு­க­ளாக வேலை செய்­து­கொண்­டி­ருந்த ‌‌‌‌ஷஹீர் ராஜீ­ருக்கு எப்­போ­துமே மோட்­டார்சைக்­கிள்­கள் மீது மோகம் அதி­கம்.

அவற்­றின் மீதான பேரார்­வம், இவர் சொந்த தொழி­லைத் தொடங்க வித்­திட்­டது. கடந்­த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காக்கி புக்­கிட் பகு­தி­யில் மோட்­டார்­சைக்கிள்­க­ளைப் பழு­து­பார்க்­கும் ‘பைக்­பாய்ஸ் எஸ்ஜி’ என்ற நிறு­வனம் ஒன்­றைத் தொடங்­கி­னார் இந்த ஆங்­கில இலக்­கி­யத் துறை பட்­ட­தாரி.

சொந்த தொழி­லைத் தொடங்­கி­ய­போது கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ணத்­தி­னால் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து மோட்­டார்­சைக்­கிள் பாகங்­களை சிங்­கப்­பூ­ருக்கு இறக்கு­மதி செய்­வ­தில் தாம­தம் ஏற்­ப­டு­வது உள்­ளிட்ட பல்­வேறு பிரச்­சி­னை­களை இவர் சமா­ளிக்க வேண்­டி­யி­ருந்­தது.

அத்­து­டன், புதிய வாடிக்­கை­யாளர்­க­ளைத் தேடு­வ­தும் பெரும் சவா­லாக விளங்­கி­யது. வாடிக்­கை­யா­ளர்­க­ளைச் சென்­ற­டைய, ‘கெரோபிஸ் பூஸ்­தர்’ எனும் திட்­டம் ஒன்­றைப் பற்றி ராஜீ­ருக்குத் தெரிந்த ஒரு­வர் எடுத்­து­ரைத்­தார். அவ­ரது ஊக்­கு­விப்­பால் ராஜீர் அதில் சேர்ந்­தார்.

இத்­திட்­டம் அக்­கம்­பக்க சில்­லறை வர்த்­த­கர்­களும் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­களும் இணை­யம்­வழி தங்­க­ளது தொழில்­களை வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கொண்டு­ சேர்க்க வகை­செய்­கிறது.

இத்­திட்­டத்­தின் உரு­வாக்­கத்­திற்கு அர­சாங்க ஊழி­யர் ஒரு­வரின் பங்­கும் எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்­பின் ஆத­ர­வும் அடங்­கி­ உள்­ளது.

ராஜீ­ரின் பழு­து­பார்ப்­புப் பட்­ட­றைக்கு வாடிக்­கை­யா­ளர்­கள் நேர­டி­யாக வரு­வ­தற்­குப் பதி­லாக ‘கெரோ­செல்’ பொருள் விற்­ப­னைத் தளத்­தில் பழு­து­பார்ப்­புப் பணி­களுக்­காக இவர் விதிக்­கும் கட்­ட­ணங்­களை­யும் மோட்­டார்­சைக்­கிள் பாகங்­க­ளின் விலை­யை­யும் பற்றி தெரிந்­து­கொள்­ள­லாம்.

ராஜீ­ரின் பழு­து­பார்ப்பு சேவை­யைப் பெற விரும்­பு­வோர், கெரோசெல் தளம் வழி­யாக நேரத்தை முன்­ப­திவு செய்ய முடி­யும்.

“புதிய வாடிக்­கை­யா­ளர்­க­ளைச் சென்­ற­டை­ய­வும் எனது ஒட்­டு­மொத்த பொருட்­க­ளை­யும் சேவை­களை­யும் பற்றி அறிய பல­ரும் பட்­ட­றைக்கு வந்­த­னர். வாடிக்­கை­யாளர்கள் இங்கு வரா­ம­லேயே அவர்­களின் பல கேள்­வி­க­ளுக்கு விடை­ய­ளிக்­க­வும் முடிந்­தது. ‘கெரோ­பிஸ் பூஸ்­தர்’ திட்­டத்­தில் சேர்ந்­த­தில் வரு­மா­னம் ஏறக்­கு­றைய 30 விழுக்­காடு கூடி­யது,” என்று கூறி­னார் ராஜீர், 32.

இத்­திட்­டத்­தில் சேர நிறு­வ­னங்­களுக்கு எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் அமைப்பு தாரா­ள­மாக நிதி ஆத­ரவு வழங்­கு­கிறது.

சிறிய தொழில்­களை மின்­னி­லக்­க­ம­ய­மாக்கி அவற்­றுக்கு ஆத­ரவு வழங்­கு­வது இத்­திட்­டத்­தின் நோக்­க­மா­கும்.

“மின்­னி­லக்க உல­கில் திறன்­பேசி வழி அனை­வ­ரும் பொருள், சேவை விலை ஒவ்­வொன்­றை­யும் ஒப்­பி­டு­வது இயல்­பா­கி­விட்­டது. மின்­னி­லக்க முறை­யில் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வது வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­கும் நிறு­வனங்­க­ளுக்­கும் நேரத்தை மிச்­சப்­படுத்­து­கிறது,” என்று ராஜீர் கூறி­னார்.

எதிர்­கா­லத்­தில் மோட்­டார்­சைக்கிள்­களில் கோளா­று­க­ளைக் கண்­ட­றிய உத­வும் தொழில்­நுட்­பச் சாத­னங்­களில் முத­லீடு செய்ய விரும்­பும் ராஜீர், அதன் வழி பழுது­பார்க்கும் நேரத்­தைக் குறைப்­பது தமது நோக்­கம் என்று விளக்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!