துயரத்தைப் போக்கி அன்பை உணர வைத்த தொண்டூழியம்

தந்­தை­யின் இழப்­பிற்­குப் பின் மிகுந்த மன­வே­த­னைக்கு ஆளா­னார் ராம­சாமி உஷா­தேவி செலின். அந்­தத் துய­ரத்­தைப் போக்க தொண்­டூ­ழி­யம் புரிய முடி­வெ­டுத்­தார். ‘ஹெஜ்­சிஏ அந்­தி­மக்­கால பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில்’ 2017ஆம் ஆண்­டி­லி­ருந்து அவ­ரது தொண்­டூ­ழி­யப் பய­ணம் தொடங்­கி­யது. ஒரு­நாள், பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் ஆள் பற்­றாக்­குறை ஏற்­பட்­ட­தால், தன்­னு­டைய சகோ­த­ர­ரின் மக­ளான பிரி­யங்­காவை உத­விக்கு அழைத்­தார்.

“நான் மிக­வும் அமை­தி­யா­ன­வள். இந்த தொண்­டூ­ழி­யப் பணியை தொடங்­கி­ய­போது எனக்­குத் தயக்­க­மாக இருந்­தது. ஆனால், அங்­குள்ள முதி­யோர் என்­னு­டன் அன்­பாக உரை­யா­டி­னர். அந்த அன்பு என்னை அவர்­க­ளு­டன் பிணைத்­து­விட்­டது. இப்­போது நாங்­கள் ஒரு குடும்­ப­மா­கி­விட்­டோம்,” என்­றார் யமாகா இசைப் பள்­ளி­யில் பயி­லும் ஜெக­தீ­சன் பிரி­யங்கா செசனா.

ஒரு­முறை, அதிக எண்­ணிக்­கை­யில் வந்­தி­ருந்த முட்­டை­களை என்ன செய்­வது என்று திண்­டா­டி­ய­போது, பிரி­யங்­கா­வின் யோச­னைப்­படி இரு­வ­ரும் ஃபிரிட்­டாடா என்ற இத்­தா­லிய உணவு வகை­யைச் சமைத்­த­ன­ராம். வாழ்க்­கை­யில் முதல் முறை­யாக அந்த உணவு வகையை உண்ட பரா­ம­ரிப்பு நிலை­யத்­தின் முதி­யோ­ரி­டையே அந்த உணவு பெரும் வர­வேற்­பைப் பெற்­ற­தாக செலின் பகிர்ந்­து­கொண்­டார்.

“சேர்ந்து சமூ­கப்­பணி செய்­தது வழி பிரி­யங்­கா­வு­டன் நான் நெருக்­க­மா­னேன். தொண்­டூ­ழி­யத்­தின்­மேல் எனக்கு ஏற்­பட்ட ஆர்­வம், அவ­ளை­யும் தொற்­றிக்­கொண்­டது. அதே­போல, அவ­ளுக்கு இசை­யின் மேல் உள்ள காதல் என்னை மறு­ப­டி­யும் பியானோ கற்­றுக்­கொள்ள வைத்­து­விட்­டது,” என்று கூறி­னார் பணி ஓய்வு பெற்­றுள்ள 61 வய­தான செலின்.

இந்த அன்பர் தினத்தில் உதவி தேவைப்படுவோருக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிய giving.sg தளத்தை மக்கள் நாடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!