கற்­ப­னைக்கு உயிர்­த­ரும் ஃபஸ்­ரினா

கேலிச்­சித்­தி­ரம், வீடியோ விளை­யாட்டு, தொலைக்­காட்சி நிகழ்ச்சி போன்­ற­வற்­றில் தோன்­றும் கற்ப­னைக் கதா­பாத்­தி­ரம்போல் தன் தோற்­றத்தை மாற்­றிக்­கொள்­ப­வரை ‘காஸ்ப்ளே’ (cosplay) கலை­ஞர் என்­போம். அந்­தக் கதா­பா­ரத்­தி­ரத்­தைப்போலவே தங்­க­ளின் ஆடை, சிகை அலங்­கா­ரம், ஆப­ர­ணங்­களை மிகத் துல்­லி­ய­மா­கப் அமைத்­துக்கொள்­வார்­கள்.

முழு­நேர மக்­கள்தொடர்பு அதி­கா­ரி­யான 27 வயது ஃபஸ்­ரினா நசீர், கிட்­டத்­தட்ட 10 ஆண்­டு­க­ளாக ‘காஸ்ப்ளே’ கலை­ஞ­ராக இருக்­கி­றார்.

“என் நெருங்­கிய தோழி முதல்­மு­றை­யாக எனக்கு ஜப்­பா­னிய உயி­ரோ­வி­யங்­களை (animation) அறி­மு­கப்­ப­டுத்­தி­னார். பின்­னர், அதில் எனக்கு அதீத ஈடு­பாடு ஏற்­பட்­டது. ஜப்­பா­னிய அனி­மே­ஷன் கதா­பாத்­தி­ரம் ஒன்­றின் உடை­யைப் பார்த்­து­விட்டு 12 வய­தில் எனது முதல் காஸ்ப்ளே ஆடையை வாங்கி அதை நான் அணிந்து வெளியெ சென்­றேன்,” என்று பகிர்ந்­து­கொண்­டார் ஃபஸ்­ரினா.

காஸ்ப்ளே சமூ­கத்­தி­ன­ரி­டையே ‘செவன்’ (seven) என்று அறி­யப்­படும் ஃபஸ்­ரினா, 17 வய­து­மு­தல் முக ஒப்­பனை செய்­வ­தி­லும் நாட்­டம் கொண்­டார்.

காஸ்ப்ளே கலைக்கு முக ஒப்­பனை துணைபோவ­தால் தனக்­குப் பிடித்­த­மான இரு நட­வ­டிக்­கை­க­ளை­யும் ஒரே நேரத்­தில் செய்­யும் வாய்ப்பு தனக்­குக் கிடைத்­துள்­ளது என்­கி­றார்.

“எனக்­குப் பிடித்த ஒரு கற்­ப­னைக் கதா­பாத்­தி­ரத்­தின் கண்­ணோட்­டத்­தில், சிந்­திக்­கும் சுதந்­தி­ரத்தை காஸ்ப்ளே எனக்­குத் தரு­கிறது. சிகை அலங்­கா­ரம், முக ஒப்­பனை, ஆடை­கள் போன்­றவை மூலம், வேறொரு கதா­பாத்­தி­ர­மாக மாறி, அதற்கு உயிர் கொடுக்­கும் வாய்ப்பு கிடைக்­கிறது,” என்­றார் ஃபஸ்­ரினா.

1984ஆம் ஆண்­டில் ‘கொசு­புரே’ என்ற ஜப்­பா­னிய சொல்­லி­லி­ருந்து பிறந்த ‘காஸ்ப்ளே’, சிங்­கப்­பூ­ருக்கு ஒன்­றும் புதி­தல்ல. சிங்­கப்­பூர் ஆண்டு­தோ­றும் நடத்­தி­வ­ரும் ‘ஆசிய அனிமே ஃபெஸ்டி­வல்’ மாநாடு, காஸ்ப்ளே தொழில்­து­றை­யி­னர், ரசி­கர்­கள், ஆர்­வ­லர்­கள் ஆகி­யோரை ஒருங்­கி­ணைக்­கும் ஒரு தள­மாக உள்­ளது. 2008 முதல் சன்­டெக் சிங்­கப்­பூர் கண்­காட்சி மாநாட்டு, மையத்­தில் நடத்­தப்­பட்டு வரும் இந்த விழா, இன்­று­வரை சுமார் 1.7 மில்­லி­யன் பங்­கேற்­பா­ளர்­களை ஈர்த்­துள்­ளது.

சிங்­கப்­பூர் பய­ணத்­து­றைக் கழ­கத்­தின் ‘சிறந்த பொழு­து­போக்கு நிகழ்ச்சி’க்கான விரு­தை­யும் 2019ல் இந்த மாநாடு வென்­றது.

“மாநா­டு­க­ளின்­போது என்­னோடு புகைப்­ப­டங்­கள் எடுத்­துக்­கொள்ள பல­ரும் கேட்­ப­துண்டு. அவர்­க­ளின் முகங்­களில் காணப்­படும் பிரம்­மிப்பு எனக்கு மகிழ்ச்சி அளிக்­கும்,” என்­றார் ஃபஸ்­‌ரினா.

“ஒரு முழு­நேர வேலை­யில் இருந்­து­கொண்டே காஸ்ப்ளே மீதும் கவ­னம் செலுத்­து­வ­தால் நான் சோர்ந்­து­போ­வ­துண்டு. ஆனால், இந்த ஆர்­வத்தை வளர்க்க எனக்கு இப்­போது வரு­மா­ன­மும் கிடைப்­ப­தால் என்னை நானே உற்­சா­கப்­ப­டுத்­திக்­கொள்­வேன்,” என்­றார் ஃபஸ்­ரினா.

இவர் அடுத்து என்ன ஒப்­பனை செய்­யப்போகி­றார், எந்த கதா­பாத்­தி­ரத்­தைத் தேர்ந்­தெ­டுக்­கப்போகி­றார் என நண்­பர்­களும் குடும்­பத்­தா­ரும் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருப்­ப­தா­க­வும் தனது படைப்­பாக்­கத்தை அவர்­க­ளி­டம் காட்­டுவ­தில் தான் பெரு­ம­கிழ்ச்சி அடை­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார் ஃபஸ்­‌ரினா.

 

செய்தி: காயத்­திரி காந்தி

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!