தந்­தை­போல் வானில் வட்­ட­மி­டும் லாவேஷ் ஷேன்

தன் தந்­தை­யைப்போல் தானும் ஒரு விமானி ஆக வேண்­டும் என்று சிறு­வ­ய­தி­லி­ருந்தே லாவேஷ் ஷேன், 18, லட்­சி­யம் கொண்­டி­ருந்­தார். இதற்­காக உயர்­நி­லைப்­பள்­ளி­யில் பயின்ற காலத்­தி­லேயே விமா­னத் துறை சார்ந்த ‘ஏரோ­மா­ட­லிங்’ இணைப்­பாட நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டார். தன் சிறுவ­யது இலக்கை அடைய சிங்­கப்­பூர் இளம் விமா­னி­கள் சங்­கத்­தில் இணைந்­தார்.

அவ­ரின் கடின உழைப்­புக்­குக் கடந்த 10ஆம் தேதி­யன்று நடை­பெற்ற விருது விழா­வில் அங்கீகாரம் கிடைத்­தது. விமா­னம் ஓட்­டும் பயிற்­சி­யில் சிறப்­புத் தேர்ச்சி பெற்ற 24 தொடக்­கக் கல்­லூரி மற்­றும் பல­து­றைத் தொழில்­நுட்­பக் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு ‘பைலட் விங்’ பதக்­கச் சின்­ன­மும் (badge) சான்­றி­த­ழும் வழங்­கப்­பட்­டன. ‘எஸ்டி இன்­ஜி­னி­ய­ரிங் எக்­சலன்ஸ்’ விரு­து­களில் ‘விமா­னம் ஓட்­டு­வ­தில் தலைசிறந்­த­வர்’ பிரி­வில், இரண்­டாம் நிலை­யில் வந்­தி­ருந்­தார் ஷேன்.

விழா­வில் தற்­காப்பு, மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

தற்­போது தெமா­செக் பலதுறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் இரண்­டா­மாண்டு மருத்­துவ உயிர்­தொ­ழில்­நுட்­பத் துறை­யில் பயின்று வரு­கி­றார் ஷேன்.

படிப்பு ஒரு துறை­யி­லும் விருப்­பம் இன்­னொரு துறை­யி­லும் இருப்­ப­தால் நேரத்­தைச் சரி­வ­ரத் திட்­ட­மி­டு­வது அவ­ருக்­குச் சவா­லாக அமைந்­தது எனக் கூறி­னார். கால அட்­ட­வணை உத­வி­ய­தாக அவர் கூறி­னார்.

சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப்படை­யில் தன் கனவை ஒரு­நாள் நன­வாக்­கிட, இந்த விருது ஊக்­கம் தரு­வ­தாக அமைந்­துள்­ளது என்­றார். வானில் பறக்­கும் ஒவ்­வொரு நாளும் சுமு­க­மாக அமை­வ­தில்லை. அவ்­வாறு ஷேன் துவண்டு போகும் நேரங்­களில் தன் குடும்­பத்­தி­னர் பெரும் ஆத­ர­வாக இருப்­ப­தா­கக் கூறி­னார்.

குறிப்­பாக தன் தந்தை கூறிய ஆலோ­சனை ஒன்­றைப் பகிர்ந்­து­கொண்­டார் அவர்.

“உன் சூழ­லுக்கு ஏற்ப உன்னை மாற்­றிக்­கொண்டு தன்­னம்­பிக்­கை­யு­டன் எதிர்­நீச்­சல் போட்­டால் எதை­யும் எதிர்­கொள்­ள­லாம்,” என்று அவர் தந்தை கூறு­வா­ராம்.

கட்­டொ­ழுங்­கான வாழ்க்­கை­மு­றை­யைப் பின்­பற்றி வரும் ஷேன், விமா­னங்­கள் புறப்­ப­டு­வ­தும் தரை இறங்­கு­வ­தும் பார்ப்­ப­தையே தனது பொழு­து­போக்­கா­கக் கொண்­டுள்­ளார்.

பட்­ட­யக் கல்­வியை முடித்த பின்­னர், சிங்­கப்­பூர் ஆகா­யப்படை­யில் ஒரு போர் விமா­னி­யாக விரும்­பு­கி­றார் இவர்.

செய்தி: திவ்­யா­தாக்­‌ஷாய்னி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!