கொண்­டாட்­டத்­துக்கு அழகு சேர்க்­கும் ஷாலினி

தன் உயிர்த்­தோ­ழி­யின் பிறந்­த­நாள் கொண்­டாட்­டம் வித்­தி­யா­ச­மாக இருக்க வேண்­டும் என்று ஷாலினி சாரா, 30, விரும்­பி­னார். ஆனால் வெளிப்­பு­றங்­களில் அமர்ந்து உண­வ­ருந்­து­வ­தற்­கான (picnic) அலங்­கா­ரச் சேவை வழங்­கும் நிறு­வ­னங்­கள் எது­வும் அவரது எதிர்­பார்ப்­பு­க­ளுக்கு ஏற்ப இல்லை.

அத­னால் தோழி­யின் பிறந்­த­நா­ளுக்­குத் தானே ‘பிக்­னிக்’ அலங்­கா­ரம் செய்­ய­லாம் என்று இறங்­கி­னார் ஷாலினி. தனது கைவண்­ணத்­தில் உரு­வான அலங்­கா­ரத்­தைக் காட்­டும் படங்­களை அவர் தன் சமூக ஊட­கப் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­தார்.

படங்­க­ளுக்கு மக்­க­ளி­டையே அமோக வர­வேற்பு கிடைத்­தது. பல­ரும் ஷாலி­னி­யின் ‘பிக்­னிக்’ அலங்­கா­ரச் சேவையை நாடி­வர, அதில் உரு­வா­ன­து­தான் ஷாலி­னி­யின் ‘பை இன் த ஸ்கை பிக்­னிக்ஸ்’ (pie in the sky picnics).

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் கலைத்­து­றை­யில் பட்­டம் பெற்ற இவர், விருந்­தோம்­பல் துறை­யில் இருந்­தார். நான்கு ஆண்­டு­க­ளாக ஹோட்­ட­லின் விளம்­பர, தொடர்பு அதி­கா­ரி­யாக முழு­நேர வேலை­யில் இருந்த அதே வேளை­யில் ‘பிக்­னிக்’ அலங்­கா­ரச் சேவையை வழங்­கி­வந்­தார்.

இருப்­பி­னும் ஹோட்­டல் வேலை, அவருக்கு மன­நி­றை­வும் அளிக்­க­வில்லை, அவருடைய படைப்­பாக்­கத் திறனை வெளிப்­ப­டுத்த வாய்ப்­பும் தர­வில்லை. அத­னால் ஷாலினி அந்த வேலையை விட்டு கடந்த ஐந்து மாதங்­க­ளாக ‘பிக்­னிக்’ அலங்­கா­ரச் சேவை வழங்­கு­வதை முழு­நே­ர­மா­கச் செய்­து­வ­ரு­கி­றார்.

அலங்­கா­ரத்­தைச் செய்து முடிப்­ப­தற்­குக் கிட்­டத்­தட்ட 20 நிமி­டங்­க­ளி­லி­ருந்து 2 மணி நேரம் வரை தேவைப்­ப­டு­வ­தாக ஷாலினி குறிப்­பிட்­டார். தமது அலங்­கா­ரம் தனித்­துத் தெரி­வ­தற்கு ‘பின்ட்­ரெஸ்ட்’ இணை­யத்­த­ளத்தை நாடு­வ­தாக பகிர்ந்­து­கொண்­டார். அதில் வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளின் ‘பிக்­னிக்’ அலங்­கா­ரங்­க­ளைப் பார்த்­துத் தன் அலங்­கா­ரத்­தைத் திட்­ட­மி­டு­வ­தா­கக் கூறுகிறார் ஷாலினி.

பெரும்­பா­லும் வாரஇறு­தி­களில் அலங்­கா­ரங்­க­ளைத் தனி­யா­கச் செய்­யும் ஷாலினி, கொண்­டாட்­டங்­கள் பிரம்­மாண்­ட­மாக இருந்­தால் பகு­தி­நேர ஊழி­யர்­க­ளின் உத­வியை நாடு­வ­தா­கச் சொன்­னார்.

வரு­மா­னம் நிலை­யாக இருக்­காது, அல்­லது கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் வந்­து­வி­ட­லாம் போன்ற கவ­லை­க­ளுக்கு இடை­யி­லும் ஷாலி­னி­யின் பெற்­றோர் தங்­கள் மக­ளின் கனவை நன­வாக்க நம்­பிக்­கைத் தூண்­க­ளாக உள்­ள­னர். தம் தந்தை அலங்­கா­ரம் தேவைப்­படும் இடங்­க­ளுக்­குத் தம்மை அழைத்­துச் சென்று உதவு­வ­தாக ஷாலினி கூறுகிறார்.

‘பிக்­னிக்’ அலங்­கா­ரம் பெரும்­பா­லும் வெளிப்­புற இடங்­களில் தேவைப்­ப­டு­வ­தால் தாம் சந்­திக்­கும் மிகப் பெரிய சவால், வானி­லை­தான் என்று கூறு­கி­றார் ஷாலினி. வானிலை சாத­க­மாக அமை­யா­விட்­டால் அதற்­கான மாற்­றுத் திட்­டத்­தை­யும் தம் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­காக வைத்­தி­ருப்­பார்.

“திரு­ம­ணத்­திற்­குச் சம்­ம­தம் கேட்­டல், பிறந்­த­நாள் விழா, மணப்­பெண்­ணுக்­காக தோழி­கள் நடத்­தும் கொண்­டாட்­டம் எனப் பல­ரின் வாழ்க்­கை­யில் நிக­ழும் முக்­கி­ய­மான தரு­ணங்­களில் நானும் பங்­காற்றி உள்­ளேன் என்ற எண்­ணமே எனக்கு மன­நி­றைவை அளிக்­கிறது,” என்று கூறு­கி­றார் ஷாலினி.

தன் சேவை­யைத் தொடர்ந்து செய்ய, வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பாராட்டு மழை தமக்கு ஊக்­கம­ளிப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­தார். தம் அலங்­கா­ரத் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொண்டு பிரம்­மாண்ட அள­வி­லான நிகழ்ச்­சி­க­ளுக்­குத் திட்­ட­மி­டும் நிர்­வா­கப் பணி­யில் எதிர்­கா­லத்­தில் ஈடு­பட ஷாலினி திட்­ட­மிட்­டுள்­ளார்.

செய்தி: திவ்­யா­தாக்­‌ஷாய்னி

படங்­கள்: ஷாலினி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!