‘சேவையுள்ளத்தை என்னுள் விதைத்தது பள்ளிப்பருவம்’

எங்­கள் பள்­ளி­யின் முன்­னாள் மாண­வர் ஒரு­வர், மருத்­து­வ­ரா­கப் பணி­யாற்றி சமு­தா­யத்­தில் முக்­கிய அங்­கம் வகிப்­பது எங்­க­ளுக்­குப் பெருமை சேர்க்­கும் ஒன்று.

செயின்ட் ஜோசப் கல்வி நிலை­யத்­தின் முன்­னாள் மாண­வ­ரான 27 வயது திரு நவீன்­கு­மார் சுப்­பி­ர­ம­ணி­யன், பள்ளி நாள்களில் இந்­திய கலா­சார மன்­றத்­தில் தலை­வ­ரா­க­வும் இருந்­தார்.

அவர் ஐந்­தாண்­டு­க­ளாக ஸ்காட்­லாந்­தின் டண்டீ பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மருத்­து­வப் படிப்பை மேற்­கொண்டு தற்­போது தேசிய பல்­க­லைக்­க­ழக மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்றி வரு­கி­றார்.

பள்­ளி­யின் வர­லாற்­றி­லேயே முதல்­முறை­யாக இந்­திய கலா­சார முகா­முக்கு ஏற்­பாடு செய்த பெருமை திரு நவீன்­குமா­ரைச் சேரும். பள்­ளி­யில் பல்­வேறு முகாம்­கள் நடந்­த­போ­தும் இந்­திய கலா­சா­ரம் தொடர்­பில் முகாம் இல்­லா­தது அவர் சிந்­த­னை­யைத் தூண்­டி­யது.

தம் திட்­டம் நிறை­வேற, அரும்­பா­டு­பட்டு இந்­திய கலா­சார முகாமை நடத்­தும் பெரும் பொறுப்பை அவர் ஏற்­றார்.

நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தல், மாண­வர்­க­ளைக் கவ­னித்­துக்கொள்­ளு­தல், நிதித் தேவையை அறிந்து பணத்­துக்கு ஏற்­பாடு செய்­தல் போன்ற பல­தரப்­பட்ட பணி­களை அவர் மேற்­கொண்­டார்.

தாம் மேற்­கொண்­டுள்ள

பணி­யைச் சிறப்­பா­கச் செய்­திட வேண்­டும் என்­ப­தில் குறி­யாய் இருந்த நவீன்­குமார், தமது குழு­வி­ன­ரு­டன் இணைந்து செயல்­பட்டு முகாமை வெற்­றி­க­ர­மாக நடத்தி முடித்­தார்.

அன்று அவர் தொடங்கி வைத்த இந்­திய கலா­சார முகாம் திட்­டம், இன்று­வரை நூற்­றுக்­கும் மேற்­பட்ட தமிழ் மாண­வர்­கள் கலந்­து­கொள்­ளும் ஒன்­றாக பின்­பற்­றப்­பட்டு வரு­கிறது.

தமது 13வது வய­தில் முதல் முகாமை ஏற்­பாடு செய்த அனு­ப­வம், அதை­ய­டுத்து வந்த முகாம்­க­ளுக்கு அவர் ஏற்­பாடு செய்­திட சிறந்த அடித்­த­ள­மாக அமைந்­தது.

உயர்­கல்வி, பல்­க­லைக்­க­ழ­கம் என வெவ்­வேறு கல்­விக் கூடங்­களில் தாம் கல்வி பயின்­ற­போ­தும் யாரா­வது தம்­மி­டம் ‘எங்கு படித்­தீர்­கள்?’ என்று கேட்­டால் முத­லில் தம் வாயில் வரு­வது ‘எஸ்­ஜேஐ’தான் என்று அவர் பெரு­மைப்­பட கூறி­னார்.

மக்­க­ளுக்­காக சேவை­யாற்­றும் ஒரு தொழி­லில் தம்மை ஈடு­பட வைத்­தது அந்­தப் பள்­ளி­யையே சாரும் என்­றார் அவர். பொறி­யி­யல் துறை­யைத் தேர்ந்­தெ­டுக்­க­வி­ருந்த அவரை, மருத்­து­வத் துறை­யில் சேரு­மாறு பள்ளி நண்­பர் ஊக்­கு­வித்­த­தை­யும் நவீன்­கு­மார் நினை­வு­கூர்ந்­தார்.

இன்­று­வரை நீடிக்­கும் தம்­மு­டைய நட்­புக்­குப் பால­மாக அமைந்­தவை பள்­ளி­யின் தமிழ்த்­துறை மற்­றும் இந்­திய கலா­சார மன்­ற­மும்­தான் என்­றார் அவர்.

நேர்­கா­ண­லின்­போ­து­கூட திரு நவீன்­கு­மார், எங்­க­ளு­டன் ஒரு நண்­ப­ரைப் போல் உரை­யா­டி­ய­து­டன் உயர்­கல்வி மேற்­கொள்­வ­தற்­கான ஆலோ­ச­னை­கள் சில­வற்­றை­யும் கூறி­னார்.

இந்­தப் பேட்­டி­யின் மூலம் மருத்­து­வர் நவீன்­கு­மா­ரின் தொடர்பு எங்­க­ளுக்­குக் கிடைத்­துள்­ள­தில் பெரு­மி­தம் கொள்­கி­றோம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!