இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு உயர் பதவி

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், அவரது குடி யரசுக் கட்சியைச் சேர்ந்த சௌத் கேரொலைனா மாநில ஆளுநர் நிக்கி ஹேலியை அமெரிக்காவின் ஐநா தூதராக நியமித்துள்ளார். இவரையும் தம்மை எதிர்த்த மற்றொரு பெண்மணியான பெட்சி டிவோஸ் என்பவரையும் கல்வி அமைச்சராக திரு டிரம்ப் நியமித்து உள்ளதால் தமக்கு எதிராக கருத்துக் கூறியவர்களை அர வணைத்துச் செல்வதில் அவர் ஆர்வமாக உள்ளதாகக் கூறப்படு கிறது. நிக்கி ஹேலி என்பவர் அமெரிக்காவில் குடியேறிய இந்திய தம்பதியருக்குப் பிறந்தவர். திரு டிரம்ப், 'கு கிளக்ஸ் கிளான்' என்ற அமெரிக்க இன வாத அமைப்பை வெளிப்படையாக சாடத் தவறியதற்காக அவருடன் நிக்கி ஹேலி நேரடியாக மோதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதைவிட பெரிய ஆச்சரியமாக பெட்சி டிவோசை அவர் கல்வி அமைச்சராக நியமித் துள்ளார். இவர் அரசாங்கப் பள்ளி களுக்கு மாற்றாக தனியார் பள்ளி களில் பிள்ளைகளை அனுப்பு வதற்கு அரசு நிதி வழங்க முன்வர வேண்டும் என்று போராடியவர்.

அமெரிக்காவுக்கான ஐநா தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி. படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!