ஓட்டுநர் இல்லா சிறிய பேருந்தை ‘என்டியு’ சோதித்து பார்க்கிறது

நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகம் (என்டியு) புதிய ஓட்டுநர் இல்லா சிறிய பேருந்தைச் சோதித்து பார்த்து வருகிறது. அது 2013ஆம் ஆண்டிலிருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக் கும் சுயமாகச் செல்லும் கோல்ஃப் வண்டி மற்றும் இருவழி சேவை ஆகியவற்றைவிட அதிநவீனமா னது. இந்தச் சிறிய பேருந்தில் எத்தனை பேர் ஏறுகிறார்கள் என் பதைக் கணக்கிடுவதற்கு அதில் பல உணர்கருவிகள் உள்ளதே இதன் சிறப்பு அம்சம் என்று அந்தப் பல்கலைக்கழகம் கூறியது. அதில் நான்கு கேமராக்கள், எட்டு ஒலி ரேடார்கள் உள்ளன. அவற்றில் இரண்டு ரேடார்கள் 360 டிகிரி கண்காணிப்புடன் முப் பரிமாணப் படங்களைக் காட்டும். அப்பேருந்தில் ஜிபிஎஸ் எனும் வழிகாட்டிச் சாதனமும் மூன்றாம் தலைமுறை தொடர்பு அம்சமும் உண்டு.