ஆரோக்கியமான போட்டியை எதிர்கொள்ளும் தனுஷ்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், ராணா முதலானோர் நடித்து வரும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. கௌதம் மேனனும் தனு‌ஷும் முதன் முதலாக இணைந்துள்ள இப்படத்தின் முன்னோட்டக் காட்சியை கிறிஸ்துமஸ் விருந்தாக இன்று இரவு 8.30 மணிக்கு வெளியிட இருக்கிறார்கள். அதே நேரத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் இணைந்து நடித்துள்ள 'கவண்' படத்தின் பாடலும் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகவிருக்கிறது. 'ஹேப்பி நியூ இயர்...' என்று துவங்கும் இந்தப் பாடலை இன்று மாலை 7 மணிக்கு வெளியிடுகிறார்கள்.

இதை வெளியிடுவது தனுஷ்தான். இவர் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' பட முன்னோட்டக் காட்சிக்கு போட்டியாக 'கவண்' படத்தின் பாடல் வெளியானாலும் அதை ஆரோக்கிய மான விஷயமாக எடுத்துக்கொண்ட தோடு அதைத்தானே வெளியிடுவதன் மூலம் சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறார் தனுஷ் என்று போற்றுகிறது தமிழ்த் திரையுலகம். அஜித் எப்போதும் மற்றவர்களுக்கு உதாரணமாகத்தான் இருப்பார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!