2017 வரவுசெலவுத் திட்ட அறிக்கை பிப்ரவரி 20ஆம் தேதி தாக்கல்

2017ஆம் ஆண்டுக்கான சிங்கப் பூர் வரவுசெலவுத்திட்ட அறிக் கையை நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட், பிப்ரவரி 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் வார் என்று நேற்று நிதியமைச்சு அறிவித்தது. நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட், கடந்த ஆண்டு மே மாதம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் ஆகஸ்ட் மாதத்தில் பணிக்குத் திரும்பினார். அப்போது முதல் நாட்டின் எதிர்காலப் பொருளியல், இந்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கை தயார் செய்தல் போன்றவற்றுக்கான குழுக்களில் முனைப்புடன் செயல்பட்டு வந்தார். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட உரைக்கான நாள் அறிவிக் கப்பட்ட வேளையில் ‘பட்ஜெட் 2017’ குறித்த பொதுமக்களின் கருத்துகளை வர வேற்பதாக நிதி அமைச்சு தெரி வித்துள்ளது.

Loading...
Load next