சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர்-கம்போடியா ஒத்துழைப்பு உடன்பாடுகள் கையெழுத்து

சிங்கப்பூரும் கம்போடியாவும் நேற்று இரண்டு உடன்பாடுகளில் கையெழுத்திட்டன. வாழ்க்கைத் தொழில் கல்வி, சுகாதாரப் பரா மரிப்புத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த அவை வகை செய் கின்றன. கம்போடியா சென்றிருக் கும் அதிபர் டாக்டர் டோனி டான் கெங் யாம், கம்போடிய பிரதமர் ஹுன் சென் இருவர் முன்னிலை யில் அந்த உடன்பாடுகள் கை யெழுத்தாயின. முன்னதாக அதிபர் டாக்டர் டான் கம்போடிய மன்னரைச் சந் தித்தார். கம்போடியாவுக்கும் லாவோசுக்கும் பயணம் மேற் கொண்டு இருக்கும் டாக்டர் டான், கம்போடியாவில் சுமார் 200 சிங்கப் பூரர்களுடன் விருந்து ஒன்றில் கலந்துகொண்டார். ஆசியானில் அங்கம் வகிப்பதன் காரணமாக சிங்கப்பூரும் கம்போடியாவும் இயற்கையாகவே அணுக்கமாகச் சேர்ந்து வளர்ந்து வரும் நாடுகளாக இருக்கின்றன. அவை ஆசியான் ஒருங்கிணைப்பை நோக்கி முன் னேறி வருகின்றன என்று அப் போது அதிபர் தெரிவித்தார்.